என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன்"

    • பக்தர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவியது.
    • தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர்.

    ஆனால் விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும்போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

    இந்நிலையில், இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிசெய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

    • ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
    • யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.

    ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார். அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை வழங்கினார்.

    அவரும் அப்படியே செய்தார். அதே பழக்கத்தை தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள்.

    இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும்வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை, எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகி விடகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.

    • ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார்.
    • கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடைவீடுகள் இருப்பதுபோல, ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை "ஐயப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்து உள்ளது. இங்குள்ள கோவிலில் ஐயப்பன் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார்.

    செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ள தலம். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி ஐயப்பன் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா-புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

    செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்து உள்ள கோவில். இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    இங்கு ஐயப்பன் வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

    இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன.

    கேரளாவில் உள்ள இங்கு எழுந்தருளி உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவார் மணிகண்ட சுவாமி!
    • எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவார் மணிகண்ட சுவாமி!

    ஐயப்ப வழிபாடு மிக எளிமையானது. இந்த வழிபாட்டுக்குத் தேவை ஒழுக்கம். ஒழுக்கத்துடன் இருந்துவிட்டால் மனதில் அமைதி வந்துவிடும். மனதில் அமைதி குடிகொண்டுவிட்டால், ஆரவாரத்துக்கோ, கர்வத்துக்கோ இடமிருக்காது. கர்வமில்லாதபோது, பக்தி வந்துவிடும். பக்தியின் உச்சபட்ச நிலை என்பதுதான் சரணாகதி. 'உன்னைத் தவிர எனக்கு எவருமில்லை. நீயே எனக்கு கதி' என்று முழுவதும் ஒப்படைத்துவிட்டு செயல்படுகிற புத்தி வந்துவிடும்.

    'எனக்கு எப்போ என்ன தரணும்னு அவனுக்குத் தெரியும்யா. அவன் பாத்துக்குவான்' என்று நாம்பாட்டுக்கு நம்முடைய வேலையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிற மனோநிலை வந்துவிடும்.

    ''ஐயப்ப விரதத்தின் நோக்கமும் பூஜையின் தாத்பரியமும் அப்படியான சாத்வீக மனநிலைக்கு நம்மை மெல்ல மெல்ல தயார்படுத்துகிற முயற்சிதான்'' என்கிறார்கள்.

    ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

    தர்ம சாஸ்தா காயத்ரீ:

    ஓம் பூதாதி பாய வித்மஹே

    மஹா தேவாய தீமஹி

    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

    எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.

    இதேபோல், ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம் வலிமை மிக்கது.

    பூதநாத ஸதானந்தா

    சர்வ பூத தயாபரா

    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

    என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி. அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி.

    • வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.
    • நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.

    கார்த்திகை மாதம் பல தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்பட்டாலும், கார்த்திகை என்றால் பெரிய அளவில் பேசப்படுவது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது தான். அப்படியான ஐயப்பனை 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி அவருடைய தரிசனத்தை காணுவதே பெரும் பாக்கியம் என்று சொல்லலாம். இந்த ஐயப்பனை மட்டும் நாம் நினைத்த போதெல்லாம் தரிசனம் செய்ய முடியாது. அவரை தரிசனம் செய்வதற்கென கடுமையான விதிமுறைகளும் நேரமும் உண்டு.

    இந்த இருமுடி வழிபாட்டை அனைவராலும் செய்ய முடியாது அல்லவா? ஆகையால் ஐயப்பனை வீட்டிலிருந்தபடியே கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை எப்படி வழிபட்டால் நம்முடைய வறுமை நிலை மாறி செல்வ நிலை எட்டலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாடு செய்வதற்கான காலம் காலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம்.

    இந்த வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். படம் இல்லை என்றால் பரவாயில்லை தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தையே ஐயப்பனாக பாவித்து வணங்கலாம். அடுத்து ஒரு வாழை இலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுவதுமாக பச்சரிசியை மஞ்சள் கலந்து பரப்பி விடுங்கள். அடுத்து ஏழு மண் அகல் விளக்கை எடுத்து பஞ்சு திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

    இதற்கு அடுத்து மூன்று சிறிய கிண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிண்ணத்தில் நெய், மற்றொரு கிண்ணத்தில் மூன்று பழங்கள் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். அது உங்களுக்கு விருப்பமான எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொரு கிண்ணத்தில் நைவேத்தியமாக தேங்காய் சாதம் செய்து வைத்து விடுங்கள்.

    இப்போது வாழை இலையில் பரப்பி வைத்திருக்கும் அரிசியை பூஜை அறையில் வைத்து அதை சுற்றி நைவேத்தியத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு ஏழு அகல் விளக்கை பச்சரிசியை பார்த்தவாறு சுற்றி வைத்து ஏற்றுங்கள். இந்த விளக்குகளை ஏற்றிய பிறகு நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஐயப்பனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

    இந்த நேரத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று இந்த வார்த்தையை 108 முறை ஐயப்பனை நினைத்து சொல்லிய பிறகு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் நைவேத்தியங்களை உண்ணலாம்.

    ஐயப்பனை நினைத்து செய்யப்படும் இந்த எளிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையை மாற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஐயப்பனை காணவும் அவருடைய தரிசனத்தை பெறவும் கோடான கோடி மக்கள் அவரை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.

    • ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லற துறவை மேற்கொள்கிறார்.
    • பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்மவினையில் இருந்து மீள வேண்டுமானால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

    அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்மசிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறைவழிபாடு ஐயப்பனே.

    ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லற துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.

    மாலை போட்ட பிறகு எல்லா ஐயப்ப மார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.

    ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான் எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. ஐயப்பனுக்கு விரதம் முக்கியம். 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

    ஒருவன் பிரமச்சாரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் ஐயப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.

    இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன்.

    பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ, இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக் கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.

    சபரிமலையில் உள்ள பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    • அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து செல்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் நாளை அதிகாலையில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை காலையில் மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளை முதல் எங்கு பார்த்தாலும் சரண கோஷம் ஒலிக்கும். ஐயயப்ப பக்தர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வருவார்கள்.

    இதில் சிலர் மண்டல பூஜை தரிசனத்துக்காகவும் மற்றும் சிலர் மகர விளக்கு தரிசனத்திற்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர நாளை முதல் வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    • வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.
    • இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

    * சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி.

    * ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், ஐயப்பனின் திருமேனி அபிஷேகத்துக்குரிய நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்லும் பையைத்தான் 'இருமுடி' என்கிறோம்.

    * இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம், வீடுகளில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.

    * இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து, படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    * இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.

    * இருமுடி கட்டிக்கொள்ளும் ஐயப்ப பக்தர், குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிரப்பத் தொடங்கும் போது, நமது பிரார்த்தனைகளோடு 'சாமியே சரணம்' என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும். வீட்டில் யாராவது நெய் நிரப்ப விரும்பினால் அவர்களும் தேங்காயில் நெய் நிரப்பலாம்.

    * நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

    அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை - பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

    * முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

    * வசதி வாய்ப்புகள் இல்லாத முன் காலத்தில், இருமுடியின் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.

    * இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

    * தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

    * இதனால் ஆண்டுதோறும் வீடுகளில் சகல ஐஸ்வர்யமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது.

    • பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.
    • சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது.

    மேலும் சராசரியான கடல் நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்.

    இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம். ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனித பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியதலம் சபரிமலையே ஆகும்.

    சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரே மனதுடன் ஒரே வேட்கையுடனும் ஒரே மந்திரத்தை உட்கொண்டும் அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறு கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதற்கு அனுமதி இல்லை எனவும், மேலும் இதர பல காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.

    இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரமச்சாரி என்ற ஐதீகமே. மண்டல என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 மகா சங்கராந்தி) மற்றும் விஷூ (ஏப்ரல் 14-ந் தேதி) மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    • முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு.
    • குளத்துபுழாவில் பாலகனாக ஐயப்பன் காட்சி தருகிறார்.

    முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. அவை

    பந்தளம்:- சபரிமலைக்குச் செல்லும் வழியில் உள்ளது பந்தளம். இங்கு ஐயப்பன், மணிகண்ட பாலகனாக நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இங்குள்ள விக்ரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

    குளத்துபுழா:- பாலகனாக ஐயப்பன் காட்சி தருகிறார்.

    எருமேலி:- இங்கு எருமை முகத்துடன் திரிந்த மகிஷின் மீது நின்று அவளை வதம் செய்தார். இங்கு ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக காட்சிதருகிறார். இங்கு ஐயப்பசாமியின் தோழர் வாவர் பள்ளிவாசல், கோட்டை கருப்புசாமி கோவில்கள் உள்ளன.

    அச்சன்கோவில்:- இங்கு சுவாமி, வன அரசனாக காட்சி தருகிறார்.

    ஆரியங்காவு:- இங்கு சாஸ்த பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.

    சபரிமலை:- சபரி பீடமே சபரி மலையானது.

    • பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார்.
    • மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.

    மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான். முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.

    மகிஷியை அழிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

    பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.

    மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.

    குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

    இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.

    மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான். புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான். காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்று எழுந்தாள்.

    ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய அய்யப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள். அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு ஐயப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள். 12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.

    சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.

    அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது.

    இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    • துளசி மாலையில், மணியைக் கோர்த்து குழந்தையின் கழுத்தில் போட்டனர்.
    • துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது.

    ஐயப்பன் அவதரித்தபோது, அவரது தாயான திருமாலும், தந்தையான சிவபெருமானும் பம்பை நதிக்கரையில் விட்டுச் சென்றனர். அப்போது குளிர்காற்றில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, துளசி மாலையில், மணியைக் கோர்த்து கழுத்தில் போட்டனர்.

    இதுதவிர மகாவிஷ்ணுக்கு பிடித்தது துளசி. இதனால்தான் ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், துளசி மாலையில், ஐயப்பனின் உருவம் பொறித்த டாலரை அணிகின்றனர். கார்த்திகை மாதம், மழைக்காலம். துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது என்பதால், துளசிமாலையை அணிவதாக அறிவியல் ரீதியான விளக்கமும் உள்ளது.

    ×