என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்ப சரணம்"

    • ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
    • யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.

    ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார். அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை வழங்கினார்.

    அவரும் அப்படியே செய்தார். அதே பழக்கத்தை தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள்.

    இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும்வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை, எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகி விடகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.

    • அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து செல்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் நாளை அதிகாலையில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை காலையில் மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளை முதல் எங்கு பார்த்தாலும் சரண கோஷம் ஒலிக்கும். ஐயயப்ப பக்தர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வருவார்கள்.

    இதில் சிலர் மண்டல பூஜை தரிசனத்துக்காகவும் மற்றும் சிலர் மகர விளக்கு தரிசனத்திற்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர நாளை முதல் வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    • ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
    • ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம

    அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து இரட்சித்து அருள வேண்டும்.

    ஓம் சத்தியமான பதினெட்டாம்படி மேல்

    வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன்

    அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

    காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம்

    அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன்

    ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

    பூதநாத சதானந்த சர்வ பூத தயாபரா

    ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

    சுவாமியே சரணம் அய்யப்பா!

    ×