என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்ப பக்தர்"

    • அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து செல்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் நாளை அதிகாலையில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை காலையில் மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளை முதல் எங்கு பார்த்தாலும் சரண கோஷம் ஒலிக்கும். ஐயயப்ப பக்தர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வருவார்கள்.

    இதில் சிலர் மண்டல பூஜை தரிசனத்துக்காகவும் மற்றும் சிலர் மகர விளக்கு தரிசனத்திற்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர நாளை முதல் வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

    • விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை வந்த ஐயப்ப பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வந்த தமிழக பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து மனம் வருந்தினேன். உறவினர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுபோல கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    ×