என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருமுடி"

    • வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.
    • இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

    * சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி.

    * ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், ஐயப்பனின் திருமேனி அபிஷேகத்துக்குரிய நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்லும் பையைத்தான் 'இருமுடி' என்கிறோம்.

    * இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம், வீடுகளில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.

    * இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து, படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    * இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.

    * இருமுடி கட்டிக்கொள்ளும் ஐயப்ப பக்தர், குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிரப்பத் தொடங்கும் போது, நமது பிரார்த்தனைகளோடு 'சாமியே சரணம்' என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும். வீட்டில் யாராவது நெய் நிரப்ப விரும்பினால் அவர்களும் தேங்காயில் நெய் நிரப்பலாம்.

    * நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

    அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை - பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

    * முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

    * வசதி வாய்ப்புகள் இல்லாத முன் காலத்தில், இருமுடியின் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.

    * இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

    * தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

    * இதனால் ஆண்டுதோறும் வீடுகளில் சகல ஐஸ்வர்யமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம் செய்கின்றனர்.
    • மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.ஆர்.சேதுபதி நகர் வழிபாட்டு மன்றம் உள்பட 108 மன்றங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    மாவட்ட ஆன்மீக நிர்வாக குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் தணிக்கை குழு பொறுப்பாளர் நாகசேகரன், மாவட்ட வேள்விக் குழு தலைவி சாந்தி தனபால் முன்னிலையில், வட்ட, மன்றத் தலைவிகள் ஏற்பாட்டில் மாலை அணிந்து வருகின்றனர்.

    ஆர்.ஆர்.சேதுபதி நகர் மன்ற தலைவி நித்திய கல்யாணி மாரிமுத்து தலைமையில் மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.

    ராமநாதபுரம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதில் இரு முடி கட்டி பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் இருமுடி செலுத்தினர். இந்த ஆண்டு இதுவரை 40 ஆயிரம் பேர் இருமுடி கட்டி பயணம் செய்துள்ளனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் வசதி வழங்கிய கோட்ட மேலாளர், காரைக்குடி பொது மேலாளர், ராமநாதபுரம் புறநகர் பிரிவு மேலாளர் பாலமுருகன் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    • அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும்
    • அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    அய்யப்ப உருவ தத்துவம்

    அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசன முறையாகும்.

    இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை.

    இந்நிலையில் உடல் வில் போல் ஆடும் தன்மையுடையது.

    குதி கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.

    இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மரந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும்.

    அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுரபைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.

    ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்த சின் முத்திரையை "அறிவடையாளம்" என்பர்.

    இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல்,

    பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.

    மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம் பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.

    அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

    அய்யப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும்.

    ×