search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம்
    X

    ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் குடும்பத்துடன் இருமுடி கட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றார்.

    மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம் செய்கின்றனர்.
    • மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.ஆர்.சேதுபதி நகர் வழிபாட்டு மன்றம் உள்பட 108 மன்றங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    மாவட்ட ஆன்மீக நிர்வாக குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் தணிக்கை குழு பொறுப்பாளர் நாகசேகரன், மாவட்ட வேள்விக் குழு தலைவி சாந்தி தனபால் முன்னிலையில், வட்ட, மன்றத் தலைவிகள் ஏற்பாட்டில் மாலை அணிந்து வருகின்றனர்.

    ஆர்.ஆர்.சேதுபதி நகர் மன்ற தலைவி நித்திய கல்யாணி மாரிமுத்து தலைமையில் மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.

    ராமநாதபுரம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதில் இரு முடி கட்டி பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் இருமுடி செலுத்தினர். இந்த ஆண்டு இதுவரை 40 ஆயிரம் பேர் இருமுடி கட்டி பயணம் செய்துள்ளனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் வசதி வழங்கிய கோட்ட மேலாளர், காரைக்குடி பொது மேலாளர், ராமநாதபுரம் புறநகர் பிரிவு மேலாளர் பாலமுருகன் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    Next Story
    ×