search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruby Manokaran MLA"

    • ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • மக்களுக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு செயல்படுத்தவில்லை.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் எங்கள் தலைவர் ராகுல்காந்தியை நேருக்குநேராக எதிர்கொள்ள முடியாத பாரதீய ஜனதா அரசு, பழிவாங்கும் போக்கோடு அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து இருக்கிறது.

    சமீபத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை, மத்திய பாரதீய ஜனதா அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை கட்டுப்படுத்த நினைத்து, இப்படியொரு ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தி இருக்கிறது.

    கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் இந்த மோடி அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசாங்கத்தின் முக்கியத் துறைகளான நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முன்பு இங்கே பிரிட்டிஷார் நடத்திய ஆட்சியைப் போல, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மோடி அரசின் இந்த செயல்களால் மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு எதிராக எல்லோரும் திரும்பிக்கொண்டி ருக்கிறார்கள்.

    இதையெல்லாம் திசைத்திருப்பவே ராகுல்காந்தி மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது மோடி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சி இன்னும் இன்னும் எழுச்சி பெறும்.

    வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. பா.ஜனதா கட்சியின் வீழ்ச்சி இப்போது தொடங்கிவிட்டது.

    இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தவறாகப் பயன்படுத்தி ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்து இருக்கிறார்கள். இது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்கு மோடி அரசு விட்டுள்ள சவால்.

    இந்தியாவில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையில் பா.ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.

    இதற்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தருவார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.

    களக்காடு:

    களக்காடு அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில காங்கிரஸ் பொருளா ளருமான ரூபி மனோகரன் குளிரூட் டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதனைதொடர்ந்து பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன் மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், காமராஜ், துரைராஜ், வில்சன், துரை, யோசுவா, பீர்முகம்மது, பெருமாள்ராஜ், இளைஞர் காங்கிரஸ் விபின் உள்பட பலர் சென்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
    • பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆண்களுக்கு தரப்படும் மதிப்பும், மரியாதையும் எங்களுக்கும் தரப்பட வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண் களுக்கு தரப்பட வேண்டும் என்று, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பெண்கள் போராடியதன் தொடர்ச்சியாக உருவானது தான் உலக மகளிர் தினம்.

    அணுவின்றி எதுவும் அசையாதோ, அதேபோல் பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை. சகோதரியாக, மனைவியாக, தாயாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணி வேராகத் திகழ்பவர்கள் பெண்கள்.

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். இது, நூற்றுக்கு நூறு உண்மை. பெண்களால் மட்டும்தான், ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும். சிறந்த குடும்பங்களின் மாண்பும் பெண்களால்தான் பெருமை கொள்கிறது.

    நாமும் இந்த தருணத்தில் பெண்களை போற்றி பெருமை கொள்வோம்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
    • இங்கே பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தமிழக த்தில் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமங்கள் வரையிலும் அவர்கள் பரவி, பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள தொழில்துறைகளில் அவர்களது பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சா லைகளில் தொடங்கி சலூன் கடை வரையில் அவர்கள் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.

    இவர்களால் தமிழகத்தில் தொழில் உற்பத்தி பெருகி கொண்டிருக்கிறது. இங்கே பணிபுரியும் ஒவ்வொரு வட மாநில தொழிலாளர்களும் நல்ல சம்பளம் பெற்று, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் சிலர் உள்நோக்கத்துடன் பரவ விட்டுள்ளனர். இது இங்கே பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 30 ஆண்டு களாகவே வட மாநில தொழிலாளர்கள் இங்கே பணிக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நல்ல சம்பளம், சாப்பாடு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எல்லாம் தரப்படுகிறது. அவர்கள் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்தியாவிலேயே வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஒரே மாநிலம், நம் தமிழகம் தான்.

    ஆனால், தற்போது வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற தவறான பிம்பத்தை சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருக்கிறார்கள்.

    இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல் துறையும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
    • இந்த வெற்றி, பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று ரூபி மனோகரன் கூறினார.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி

    எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் கூறியதாவது:-

    நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எங்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்.

    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை வழங்கியுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், இந்த தேர்தலுக்காக கடும் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.க. - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த அபார வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

    இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • நாராயணன் சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள சத்திரங்காட்டில் பதநீர் இறக்கி வருகிறார்.
    • களக்காடு தனியார் மருத்துவமனையில் நாராயணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் அவரிவிளை தெருவை சேர்ந்தவர் மணி மகன் நாராயணன் (வயது 34). இவருக்கு அருணா என்ற மனைவியும் 1 பெண் குழந்தையும் உள்ளனர். நாராயணன் பனை மரம் ஏறும் தொழிலாளி. சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள சத்திரங்காட்டில் பதநீர் இறக்கி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் பனை மரம் ஏறிய போது, திடீர் என எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால்கள், முதுகு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங் பொருளாளருமான ரூபி மனோகரன் நாராயணனை சந்தித்து நிதி உதவி வழங்கினார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    மேலும் பனை மர தொழிலாளர் நல வாரியத்திற்கு பரிந்துரை செய்து, காயமடைந்த நாராயணனுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, ஜார்ஜ்வில்சன், முத்துராமலிங்கம், சந்திரசேகர், குணசேகரன், துரை அலெக்ஸ் உள்பட பலர் சென்றனர்.

    • காங்கிரஸ் பேரியக்கத்தின் 85-வது மாநாடு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
    • தவறான கொள்கைகள் காரணமாக மத்திய பாரதீய ஜனதா அரசு வீழ்ச்சியை நோக்கி செல்வதாக ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீர்மானங்கள்

    அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் 85-வது மாநாடு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இன்றுடன் நிறைவுபெற உள்ள இந்த மாநாட்டில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    ஒத்தக் கருத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் காங்கிரஸ் பேரியக்கம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை இந்த மாநாட்டில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டு உள்ளார்.

    மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையே காங்கிரசின் எதிர்கால அடையாளம். அதனால் ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை அணி திரட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானமும் இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டு இருக்கிறது.

    விழ்ச்சி

    இந்த மாநாட்டை காங்கிரசின் எழுச்சி யாகவும், மத்திய பாரதீய ஜனதா அரசின் வீழ்ச்சி அடைவதன் தொடக்கமாகவும் நான் பார்க்கிறேன்.

    தவறான கொள்கைகள், தொழிலதிபர்களான அம்பானி, அதானி ஆகியோருக்கு சாதகமான போக்கு, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு எதிராக நடைபெறும் ஆட்சி என்று, மத்திய பாரதீய ஜனதா அரசு வீழ்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

    மல்லிகார்ஜூன கார்கேயின் தலைமை, நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். மீண்டும் காங்கிரஸ் அரசாங்கம் உருவாகும். நடைபெற உள்ள ஈரோடு சட்டமன்ற தேர்தலில் காங்கி ரஸ் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

    கடந்த 21 நாட்களாக நான் ( ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.) ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களத்தில்தான் இருந்தேன். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மிகப்பெரிய எழுச்சி இங்கே இருப்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. அதனால், இந்தத் தேர்தலில் மிகப்பெரிய சரித்திர வெற்றியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெறுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்களம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
    • ராஜாக்கமங்களத்தில் உள்ள குளத்தில் இருந்து இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

    நெல்லை:

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்களம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்களத்தில் உள்ள குளத்தில் இருந்து இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

    ஆனால் ராஜாக்கமங்களம் குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அதனால் பாசன வசதி பெற்று வரும் 250 ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கொடுமுடியாறு

    கொடுமுடியாறு அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் அதிலிருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 250 ஏக்கர் நெற்பயிர்கள் காப்பாற்றப்படும்.

    நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் விடும் பருவத்தில் இருப்பதால், மாவட்ட கலெக்டரும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் உடனடியாக கொடுமுடியாறு அணையில் இருந்து, ராஜாக்கமங்களம் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் கொடு முடியாறு அணையில் இருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட மாவட்ட கலெக்டருக்கும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.

    • ரூபி மனோகரன் எம்.எல். ஏ. தலைமையில் பாளை கே.டி.சி. நகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

     நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை ஒன்றியம், பாளை வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. தலைமையில் பாளை கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    வட்டார தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனை வருக்கும் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்ல பாண்டியன், ராஜகோபால், மாநில மகிலா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வட்டார தலைவர்கள் கனகராஜ், நலன் சங்கர பாண்டியன், கணேசன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவி அனுராதா, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம் மற்றும் வட்டார நிர்வாகிகள் முத்து ராமலிங்கம், உச்சிமாகாளி, ராஜேந்திரன், நைனார் நாடார், ஏழாங்கால் வெள்ளைச்சாமி பாண்டி, முத்துப்பாண்டி, கவுன்சிலர் தெய்வானை, கனகராஜ், நடராஜன், கிறிஸ்டோபர், தேவதாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக நெல் மற்றும் கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகமாக பயிர் செய்கிறார்கள்.

    களக்காடு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இங்குள்ள விவசாயிகள் வனவிலங்குகளின் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

    குறிப்பாக, காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் காலம் காலமாக இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மலையில் இருந்து அடிவாரப் பகுதிக்கு வரும் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில், விவசா யிகளின் வாழை மற்றும் கிழங்கு பயிர் செய்துள்ள தோட்டங்களுக்குள் பெரும் கூட்டங்களாகப் புகுந்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

    வாழைப் பயிர்களின் அடிப்பகுதியைக் கடித்துக்குதறி, அதன் கிழங்கை சாப்பிடுகின்றன.

    சர்க்கரைவள்ளி கிழங்குகளையும் இவ்வாறே சாப்பிடுகின்றன. தென்னங்கன்றுகளையும் இந்தக் காட்டுப் பன்றிகள் விட்டு வைப்பதில்லை.

    தற்போது இந்தக் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை நேரில் சந்தித்த களக்காடு பகுதி விவசாயிகள், கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்த னர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் வங்கிகளில் கடன் பெற்றுதான் விவசாயம் செய்து வருகிறோம். வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில்தான் விவசாயத் தொழில் உள்ளது. இந்த நிலையில், தற்போது காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக எங்களது வாழைத்தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்தக் காட்டுப் பன்றிகள் தமிழக அரசின் வன விலங்குகள் பட்டியலில் இருப்பதால், அவற்றைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், எங்களால் அவற்றை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தி விவசாயி களை காக்க, கேரள அரசு, இந்தக் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.

    அதேபோல், தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    ஏற்கனவே நாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் இனியும் தொடர்ந்தால், எங்களால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

    மனுவைப் பெற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இதுகுறித்து சட்டமன்றத்தில் உடனடியாகப் பேசுவதோடு, முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
    • மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிடுவது தாமதமாகி வருகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

    தற்போது மணிமுத்தாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த நல்ல மழையால் நிரம்பி இருக்கிறது. அதனால், பானாங்குளம், மூலக்கரைப்பட்டி, விஜயநாராயணம் உள்ளிட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.
    • இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.

    இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட் வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயின் தாக்கம் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வாழைகளை நோய் தாக்கியது எப்படி என்பதை கண்டறிய வேண்டும். களக்காடு பகுதி வாழைகளை நம்பியுள்ள பகுதி ஆகும். மனிதர்களுக்கு நோய் பரவுவது போல் வாழைகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிவாரணம் வழங்குவார் என்றார்.

    அவருடன் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு உதவி இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலைத்துறை அதிகாரி இசக்கிமுத்து, உதவி அலுவலர் கிளாரன்ஸ் ஜோன்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர்,

    கக்கன், செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பித்துரை, திருக்குறுங்குடி பேரூராட்சி, களக்காடு நகராட்சி, பாளை தெற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், நளன், திருக்குறுங்குடி நகர தி.மு.க செயலாளர் கசமுத்து, சுரேஷ், நாங்குநேரி, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுந்தர், ஜெயசீலன், வின்சென்ட் குமார், துரை உள்பட பலர் சென்றனர். 

    ×