என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று பொங்கலிட்ட காட்சி.
பாளை சமத்துவ பொங்கல் விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- ரூபி மனோகரன் எம்.எல். ஏ. தலைமையில் பாளை கே.டி.சி. நகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
- கலந்து கொண்ட அனைவருக்கும் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
நெல்லை:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை ஒன்றியம், பாளை வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. தலைமையில் பாளை கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
வட்டார தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனை வருக்கும் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்ல பாண்டியன், ராஜகோபால், மாநில மகிலா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வட்டார தலைவர்கள் கனகராஜ், நலன் சங்கர பாண்டியன், கணேசன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவி அனுராதா, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம் மற்றும் வட்டார நிர்வாகிகள் முத்து ராமலிங்கம், உச்சிமாகாளி, ராஜேந்திரன், நைனார் நாடார், ஏழாங்கால் வெள்ளைச்சாமி பாண்டி, முத்துப்பாண்டி, கவுன்சிலர் தெய்வானை, கனகராஜ், நடராஜன், கிறிஸ்டோபர், தேவதாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






