என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samathuva Pongal Festival"

    • ரூபி மனோகரன் எம்.எல். ஏ. தலைமையில் பாளை கே.டி.சி. நகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

     நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை ஒன்றியம், பாளை வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. தலைமையில் பாளை கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    வட்டார தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனை வருக்கும் ரூபி மனோகரன் எம்.எல். ஏ. சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்ல பாண்டியன், ராஜகோபால், மாநில மகிலா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வட்டார தலைவர்கள் கனகராஜ், நலன் சங்கர பாண்டியன், கணேசன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவி அனுராதா, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம் மற்றும் வட்டார நிர்வாகிகள் முத்து ராமலிங்கம், உச்சிமாகாளி, ராஜேந்திரன், நைனார் நாடார், ஏழாங்கால் வெள்ளைச்சாமி பாண்டி, முத்துப்பாண்டி, கவுன்சிலர் தெய்வானை, கனகராஜ், நடராஜன், கிறிஸ்டோபர், தேவதாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தை பொங்கல் திருநாளை முன்னிட்டு எப்.எக்ஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • பொங்கலிடும் போட்டியில் சிவில் துறை மாணவ, மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.

    நெல்லை:

    தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பாரம்பரிய பட்டு சேலை, வேஷ்டி ஆடைகள் அணிந்து வந்தனர். கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அனைத்து துறையின் சார்பில் ரங்கோலி கோலப் போட்டி, மண்பானை ஓவிய போட்டி, நொங்கு வண்டி போட்டி, சைக்கிள் டயர் ஓட்டும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கபடி போட்டி, உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன.

    விவசாயத்தின் அடையா ளமாக மாட்டு வண்டி, டிராக்டர்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனையடுத்து குத்துவிளக்கேற்றி, சூரியனுக்கு காய், கனிகள் படைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் பொங்கலிடப்பட்டது.

    பின்னர் அனைத்து துறை சார்பில் பொங்கலிடும் போட்டி நடைபெற்றன. இதில் சிவில் துறை மாணவ, மாணவிகள் முதல் பரிசை வென்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.

    விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும், சிலம்பாட்ட மும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், ஸ்காட் குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி, வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் ஞானசரவணன், திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் பாலாஜி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏ.கே.ஒய். செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
    • விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஏ.கே.ஒய். செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கி உழவு தொழிலின் பெருமை குறித்து பேசினார்.

    கல்லூரி துணை தலைவர் ஷேக் செய்யது அப்துல்லாஹ், கல்லூரி இயக்குனர்கள் செய்யது முஹம்மது, செய்யது முஹம்மது, அப்துல் வாஹாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அயூப் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை அரசு வக்கீல் சங்கர் கலந்து கொண்டு தமிழர் பண்பாடு மற்றும் உறவுகளின் பலம் குறித்து விளக்கி பேசினார். இதில் ஹனிபா, ராஜ்குமார், வக்கீல் காந்தாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவினை மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர் இசக்கி முத்தையா தொகுத்து வழங்கினார். பாடகர் சடகோபன் நம்பி அனைத்து சமய பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாக படுத்தினார்.

    மேலும் மாணவ, மாணவிகளுக்கு உறியடி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.

    முன்னதாக கல்லூரி பேராசிரியர்கள், மாண விகள் பொங்கலிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் முஹம்மது மதார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    ×