search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
    X

    சமத்துவ பொங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

    • தை பொங்கல் திருநாளை முன்னிட்டு எப்.எக்ஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • பொங்கலிடும் போட்டியில் சிவில் துறை மாணவ, மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.

    நெல்லை:

    தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பாரம்பரிய பட்டு சேலை, வேஷ்டி ஆடைகள் அணிந்து வந்தனர். கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அனைத்து துறையின் சார்பில் ரங்கோலி கோலப் போட்டி, மண்பானை ஓவிய போட்டி, நொங்கு வண்டி போட்டி, சைக்கிள் டயர் ஓட்டும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கபடி போட்டி, உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன.

    விவசாயத்தின் அடையா ளமாக மாட்டு வண்டி, டிராக்டர்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனையடுத்து குத்துவிளக்கேற்றி, சூரியனுக்கு காய், கனிகள் படைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் பொங்கலிடப்பட்டது.

    பின்னர் அனைத்து துறை சார்பில் பொங்கலிடும் போட்டி நடைபெற்றன. இதில் சிவில் துறை மாணவ, மாணவிகள் முதல் பரிசை வென்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.

    விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும், சிலம்பாட்ட மும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், ஸ்காட் குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி, வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் ஞானசரவணன், திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் பாலாஜி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    Next Story
    ×