search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Tirukurungudi"

  • இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை.
  • ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

  திருக்குறுங்குடி அற்புதமான தலம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப் பாடி பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்). ஸ்ரீபாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு.

  அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடம் இருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.

  இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சி லைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

  பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு `மகேந்திரகிரி நாதர்' என்றும் `பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர். இத்தனை சிறப்பு பெற்ற திருக்குறுங்குடியில் பங்குனி பிரம்மோற்சவம் மிகப்பெரிய உற்சவம். அதில் இன்றைய தினம் திருத்தேர்.

  • நாக அர்ஜூன் சென்ற தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது.
  • விபத்தில் பலத்த காயமடைந்த நாக அர்ஜூன் உயிரிழந்தார்.

  களக்காடு:

  திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நாக அர்ஜூன் (வயது 28). இவர் நேற்று மாலை ஏர்வாடிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது. இந்த விபத்தில் நாக அர்ஜூன் படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றார்.

  • திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.
  • இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது.

  களக்காடு:

  திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.

  இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட் வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயின் தாக்கம் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

  வாழைகளை நோய் தாக்கியது எப்படி என்பதை கண்டறிய வேண்டும். களக்காடு பகுதி வாழைகளை நம்பியுள்ள பகுதி ஆகும். மனிதர்களுக்கு நோய் பரவுவது போல் வாழைகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிவாரணம் வழங்குவார் என்றார்.

  அவருடன் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு உதவி இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலைத்துறை அதிகாரி இசக்கிமுத்து, உதவி அலுவலர் கிளாரன்ஸ் ஜோன்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர்,

  கக்கன், செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பித்துரை, திருக்குறுங்குடி பேரூராட்சி, களக்காடு நகராட்சி, பாளை தெற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், நளன், திருக்குறுங்குடி நகர தி.மு.க செயலாளர் கசமுத்து, சுரேஷ், நாங்குநேரி, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுந்தர், ஜெயசீலன், வின்சென்ட் குமார், துரை உள்பட பலர் சென்றனர். 

  • திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
  • 21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

  களக்காடு:

  திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளியூரில் உள்ள கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாயார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். கடந்த

  21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டிற்கு வாட்ஸ்-ஆப் காலில் பேசிய மாணவி தான் திருப்பூரில் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  • திருக்குறுங்குடி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  • நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  களக்காடு:

  திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன.

  வாழைகள் 3 மாதமான ஏத்தன் ரகத்தை சேர்ந்தவை ஆகும். இவைகள் அப்பகுதியை சேர்ந்த குருநாதன், லெட்சுமணன், சண்முகசுந்தரம், முருகராணி உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகளை விரட்ட வழியின்றி தவிக்கின்றனர்.

  இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் காட்டு பன்றிகள் அட்டகாசம் குறித்து திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் பன்றிகளை விரட்ட எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். வனப்பகுதியில் இருந்து வெளி வந்த பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் அங்குள்ள கால்வாய்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அட்டகாசம் செய்து வரும் காட்டு பன்றிகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×