திருக்குறுங்குடி அருகே விபத்தில் வாலிபர் பலி

நாக அர்ஜூன் சென்ற தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த நாக அர்ஜூன் உயிரிழந்தார்.
திருக்குறுங்குடி அருகே விபத்தில் வாலிபர் பலி
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நாக அர்ஜூன் (வயது 28). இவர் நேற்று மாலை ஏர்வாடிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது. இந்த விபத்தில் நாக அர்ஜூன் படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com