என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus-2 student"

    • கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

    மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள வக்கீல் புதுத்தெரு பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகள் பொன் ரூபிணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள மீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனது பெரியம்மா செல்வராணியுடன் அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் போலீஸ் ரோந்து வாகனத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த விளக்குத்தூண் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்த பணத்துடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரிபார்த்தபோது, அதில் ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது.

    அந்த பணம் யாருடையது, எதற்காக சாலையில் வீசிச் சென்றார்கள், ஹவாலா பணமா அல்லது எங்கிருந்தாவது திருடி கொண்டு வரும்போது பயத்தில் அந்த இடத்தில் விட்டுச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வுடன் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை போலீசாரை அழைத்து ஒப்படைத்த மாணவி பொன் ரூபிணிக்கும், அவரது பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

    • அரசு பஸ்சுக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவனை ஒரு கும்பல் தாக்கியது.
    • இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சூலப்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது 16). இவர் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சுரேஷ் கடந்த 21-ம் தேதி அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பஸ்சில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாண்டித்து ரை என்பவர் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தில் சுரேஷ், பாண்டித்துரைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ் சம்பவத்தன்று காலை அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சீல்நாயக்கன் பட்டி பஸ் நிறுத்தம் அருகில் 30 பேர் கும்பல் நடு ரோட்டில் நின்று பஸ்சை வழி மறித்தது. அவர்கள் பஸ்சில் புகுந்து சுரேசை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    சுரேசை சக மாணவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீல்நாயக்கன்பட்டி பரமன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மாலதி. பிளஸ்-2 படித்து வந்த இவருக்கு வயிற்கு வலி இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காரியாபட்டி பாண்டியன்நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்காயி (48) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகள் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூக்காயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன் பாறையை சேர்ந்தவர் சோலைசாமி. இவரது மகன் சதீஸ்வரன் (28). திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தார். ஆனால் அதன் பின் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த சதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் கல்யாணி(24). இவரது கணவர் கணேஷ் 2 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த கல்யாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அம்ரிஷா பானு பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவரது மகள் அம்ரிஷா பானு (வயது 16). இவர் பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு தனது அம்மாவின் கடைக்கு சோர்வுடன் சென்றார். பின்னர் அவரிடம் வீட்டு சாவியை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த அவர் விஷத்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இரவு 7.30 மணியளவில் அம்ரிஷா பானுவின் மாமா சதாம் உசேன் என்பவர் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து அவர் தனது மனைவியுடன் சேர்ந்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் அம்ரிஷா பானு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து அம்ரிஷா பானுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் தனது பள்ளியின் இயற்பியல் ஆசிரியை மற்ற மாணவிகள் மத்தியில் திட்டியதால் மனவேதனை அடைந்து வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • 21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளியூரில் உள்ள கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாயார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். கடந்த

    21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டிற்கு வாட்ஸ்-ஆப் காலில் பேசிய மாணவி தான் திருப்பூரில் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து திலகர்திடல் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

    மதுரை

    மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் மனோஜ்குமார் நெருங்கி பழகினார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மனோஜ்குமார் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மனோஜ்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் திலகர் திடல் போலீசில் மகளை பலாத்காரம் செய்ததாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுஜாதா 

    • சிதம்பரத்தில் வீட்டில் சுருண்டு விழுந்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடலூர்

    சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடபாதி பகுதியை சேர்ந்த வர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா (வயது 16). இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். உடனடியாக ஹரீஸ் ராகவேந்திராவை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஹரீஸ் ராக வேந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ராஜாமுத்தையா மருத்து வகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிங்கம்புணரி, பிப்.20-

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சுவாதிஸ்ரீ (வயது 18). சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயோமேக்ஸ் பிரிவில் படித்து வந்தார்.

    சுவாதிஸ்ரீயிடம் அவரது தாயார் மரகதவல்லி வீட்டு வேலை ஒழுங்காக செய்வதில்லை என்றும், சரியாக படிக்கவில்லை என்றும் கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுடன் இருந்த சுவாதி ஸ்ரீ வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுவாதிஸ்ரீயின் பாட்டி அறையின் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சுவாதி ஸ்ரீயை பார்த்து அலறினார்.தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் பிளஸ்-2 மாணவி சுவாதி ஸ்ரீ யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி சுவாதிஸ்ரீயின் தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 18 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • மாணவி பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பரா ம்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஆனைமலையை சேர்ந்த பவின் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்க வைத்தனர். ஆனாலும் மாணவி பவினுடனான காதலை தொடர்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடினர். அப்போது தனது காதலன் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் மாணவி இருப்பது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற பவினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறப்பு வகுப்புக்கு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி கிராமம் மூலகவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (17).

    கவியரசு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 11-ம் வகுப்புக்காக அவரை அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ்-1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உன்னை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.

    இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரெயில் ஏறி சென்னை சென்று விட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டு வந்தனர்.

    அதன் பின்னர் பிளஸ்-1 பொதுத்தேர்வை கவியரசு எழுதி முடித்தார். அதன் பின்னர் பிளஸ்-2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கோடாங்கி காம்பவுண்டை சேர்ந்தவர் விஜய்பாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னலட்சுமி(42). இவர்களது மகள் அர்ச்சனா(19), பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    அன்ன லட்சுமியும், மகனும் சேர்ந்து ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளனர். கடந்த 6-ந் தேதி மதியம் அன்னலட்சுமி சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்தபோது அர்ச்சனா மாயமாகி விட்டது தெரியவந்தது.

    பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் தகவல் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தாயார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், தங்கள் கடைக்கு வந்து செல்லும் கண்மாய் கரையை சேர்ந்த கவுதம் என்பவர் அர்ச்சனாவை அழைத்து சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள். தற்போது 4-ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியே சொன்னால் ஒழித்து விடுவேன் என சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து நிலையில் இருந்துள்ளார்.

    சிறுமியை கண்ட பெற்றோர்கள் விசாரித்த போது அந்த மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×