பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சிங்கம்புணரி, பிப்.20-

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சுவாதிஸ்ரீ (வயது 18). சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயோமேக்ஸ் பிரிவில் படித்து வந்தார்.

சுவாதிஸ்ரீயிடம் அவரது தாயார் மரகதவல்லி வீட்டு வேலை ஒழுங்காக செய்வதில்லை என்றும், சரியாக படிக்கவில்லை என்றும் கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுடன் இருந்த சுவாதி ஸ்ரீ வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுவாதிஸ்ரீயின் பாட்டி அறையின் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சுவாதி ஸ்ரீயை பார்த்து அலறினார்.தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் பிளஸ்-2 மாணவி சுவாதி ஸ்ரீ யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி சுவாதிஸ்ரீயின் தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com