search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "praised"

    • புதுக்கோட்டையில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது
    • நூலகர் தின விழாவை முன்னிட்டு கலெக்டர் மெர்சி ரம்யா நினைவு பரிசுகளை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய, நூலகர் தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கும் மற்றும் அதிகளவில் புரவலர்களை சேர்த்த நூலகர்களுக்கும், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது பொதுமக்கள் அனைவரும் புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான செலவில் நிறைவான தகவல்களை பெறுவதற்காக பொதுமக்கள் நூலகத்தினை அதிக அளவில் பயன்படுத்திட வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம் பொதுமக்களின் நூலக பயன்பாட்டினை அதிகரிக்க முடியும். இணையதள பயன்பாட்டில் மூழ்கி இருக்கும் இன்றையகால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.

    எனவே பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நூலகத்திற்கு சென்று நல்ல நூல்களை படிப்பதன் மூலம் நம்மை நாமே நல்வழிப்ப டுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் (கூ.பொ.) சிவக்குமார், வாசகர் வட்டத் தலைவர் தங்கம்மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பேருந்தில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை டிரைவர், கண்டக்டர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • 4 பவுன் தங்கச்சங்கிலி கிடந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செந்தநீர் புரத்திற்கு அரசு நகர பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்தை பாலக்கரை பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 40) இயக்கினார். தாரநல்லூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் நடத்துனராக பணி செய்தார்.

    பேருந்து தெப்பகுளம் அருகே சென்ற போது பெண்கள் அமரும் இடத்தில் சுமார் 4 பவுன் தங்கச்சங்கிலி கிடந்துள்ளது. இதனை பார்த்த நடத்துனர், அதனை எடுத்தார். பின்னர் இது குறித்து டிரைவரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து அந்த தங்க சங்கிலியை காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையான செயலை கண்டு, போலீசார் பாராட்டினர்.

    • சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரமேஸ்வரி தம்பதியின் மகன் சன்மத் தர்ஷன். தடகள வீரர். இவர் குஜராத் மாநிலம் நாடியட்டில் நடைபெற்ற "20வது தேசிய பெடரேஷன் கப்" 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சேம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா-வில் நடைபெற்ற 4வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.34 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    அதேபோல திருப்பூரை சேர்ந்த மரிய முத்துராஜா மற்றும் ஸ்டெல்லா ஜோஸப் தம்பதியரின் மகள் ஏஞ்சல் சில்வியா. தடகள வீராங்கனை. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற "கிராண்ட் பிரிக்ஸ் 4" தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்கள் இருவரையும் பாராட்டி கெளரவிக்கும் விதமாக திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் ஐ.பி.எக்ஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன், காவல் ஆய்வாளர் முத்துக்குமார்உள்ளிட்ட திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விளையாட்டு சீருடைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். 

    • கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
    • மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார்- வாணி தம்பதியின் மகனும், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவனுமான ரித்விக், உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் நினைவு கூர்ந்து குறைந்த வினாடியில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.

    மேலும் அபாகஸ் மனக்கணித முறையில் நடைபெற்ற மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.சிறுவயது முதலே பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்றதே இது போன்ற சாதனையை படைக்க உறுதுணையாக இருந்ததாக ரித்விக் தெரிவித்துள்ளார்.

    மேலும் சாதனை படைத்த ரித்விக்கை செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர். 

    • இளையான்குடி பேரூராட்சி தலைவருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
    • செய்யது ஜமீமா பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி பேரூராட்சி தலைவராக பதவி ஏற்ற செய்யது ஜமீமா பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி நன்றி தெரிவித்து பேரூராட்சிகளின் பொது நிதி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். தலைவர், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கான மாதாந்திர படி தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமாவை பாராட்டினார். அவர் கூறிய கோரிக்கையின்படி 2-ம் நிலை மற்றும் முதல் நிலை பேரூராட்சிகளுக்கு பொதுநிதி உச்சவரம்பு ரூ. 4 லட்சத்திலிருந்து, ரூ.10 லட்சமாகவும், தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு உதவி இயக்குனர் அலுவலக பொது நிதி உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாகவும், கலெக்டர் நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதிகளின் உச்சவரம்பை உயர்த்தியதற்காக சிவகங்கை மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் சார்பில் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

    கேரளாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி. இவர், கடந்த 1999 முதல் 2004 வரை கண்ணூர் தொகுதி எம்.பி. யாக இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்துல்லா குட்டி, பாரதீய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடி யையும் அடிக்கடி பாராட்டி வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே காரணம்.

    காந்திய கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டமும் மக்களின் பாராட்டை பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா யாரும் எதிர் பார்க்காத வெற்றியை பெற்றது. இதனை எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியில் உள்ளவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியை பாராட்டியதும், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதும் கேரள காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


    இது தொடர்பாக அவர்கள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து கட்சி மேலிடம் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மோடியை புகழ்ந்ததால் இப்போது சிக்கலில் சிக்கி உள்ள அப்துல்லா குட்டி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை பாராட்டி பேசினார்.

    இதற்காக கடந்த 2009-ம் ஆண்டே அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது இங்கும் அதே சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

    ×