search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Athletics"

    • ஆண்கள் பிரிவில் 86 பேரும், பெண்கள் பிரிவில் 83 பேரும் ஆக மொத்தம் 169 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிதுள்ளார்.

    சென்னை:

    37-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி 15-ந் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிதுள்ளார். ஆண்கள் பிரிவில் 86 பேரும், பெண்கள் பிரிவில் 83 பேரும் ஆக மொத்தம் 169 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கார்த்திகேயன் சரபேஷ்வர், பாலஜீவா, சத்தி மகேந்திரன், ஜெரோம், ஸ்ரீவித்யா, திவ்யாஸ்ரீ, பிரதிக்‌ஷா யமுனா, உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    • சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரமேஸ்வரி தம்பதியின் மகன் சன்மத் தர்ஷன். தடகள வீரர். இவர் குஜராத் மாநிலம் நாடியட்டில் நடைபெற்ற "20வது தேசிய பெடரேஷன் கப்" 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சேம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா-வில் நடைபெற்ற 4வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.34 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    அதேபோல திருப்பூரை சேர்ந்த மரிய முத்துராஜா மற்றும் ஸ்டெல்லா ஜோஸப் தம்பதியரின் மகள் ஏஞ்சல் சில்வியா. தடகள வீராங்கனை. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற "கிராண்ட் பிரிக்ஸ் 4" தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்கள் இருவரையும் பாராட்டி கெளரவிக்கும் விதமாக திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் ஐ.பி.எக்ஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன், காவல் ஆய்வாளர் முத்துக்குமார்உள்ளிட்ட திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விளையாட்டு சீருடைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். 

    ×