என் மலர்
நீங்கள் தேடியது "Young man died"
- லிங்கதுரை தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார்.
- வேகமாக சென்ற கார் அங்குள்ள மரத்தின் மீது மோதியது.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் லிங்க துரை(வயது 28).
மரத்தில் மோதியது
இவர் தனது காரில் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். நேற்று அங்கிருந்து மீண்டும் காரில் இட்டமொழிக்கு திரும்பினார். அப்போது அவருடன் அவரது சகோதரியின் 6 வயது மகன் அமலேஷ் புறப்பட்டு வந்தார்.
நேற்று மதியம் நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள மான் பூங்கா அருகே மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாட்டில் சிக்கி காரை ஓட்டி வந்த லிங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுவன் அமலேஷ் காயமின்றி உயிர் தப்பினான்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கங்கைகொண்டான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த லிங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் விபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. காலனியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 28). இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலக்கோட்டை இளைஞரணி நகரச் செயலாளராக உள்ளார். நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று இரவு சென்று விட்டு நிலக்கோட்டை- வத்தலக்குண்டு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். டவர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முத்து (24) என்பவரின் பைக் நேருக்கு நேராக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கவுதம் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த அவரது உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் முத்து கைது செய்யப்பட்டார்.
- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மியாம் பள்ளி சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஜெபராஜ் (வயது 22). இவர் பாளையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு ஜெபராஜ் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெபராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.
- நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகமது (வயது 27).
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஜா முகமது மற்றும் 2 பேரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகமது (வயது 27).
இவர் கடந்த 13-ந் தேதி மேலப்பாளையம்-அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த உச்சிமாகாளி(24) தனது சகோதரர் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் காஜா முகமது படுகாயம் அடைந்தார்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஜா முகமது மற்றும் 2 பேரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஜா முகமது இன்று பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள தோப்பு பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தூரபாண்டி (வயது 32). இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு நகை கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரும் தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் காளிதாஸ் ( 24 ) ஆகிய 2 பேரும் நிலக்கோட்டையில் இருந்து தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செந்தூரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளிதாஸ் பலத்த காயங்களுடன் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- அப்போது வலையுடன் சகதியில் சிக்கி வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
பழனி:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகில் உள்ள கல்லாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது40). இவர் கடந்த சில நாட்களாக பழனி குதிரையாறு அணை அருகே வசித்து வந்தார். சம்பவத்தன்று குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.
ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தனது கணவர் மாயமானது கண்டு அவரது மனைவி மாரியம்மாள் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் தெய்வ வள்ளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
குதிரையாறு அணை அருகே அவர்கள் சென்று பார்த்தபோது கரையில் மாரிமுத்து அணிந்திருந்த ஆடைகள் மற்றும் செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து அணை ப்பகுதிக்குள் தேடினர். அப்போது வலையுடன் சகதியில் சிக்கி மாரிமுத்து இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடிபோதையில் மீனுக்கு வலை வீசியபோது அதில் தான் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவி த்தனர். இறந்துபோன மாரிமுத்துவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
- திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது.
- அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் யூசிப்பியா நகரை சேர்ந்தவர் சையது முகமது (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பஜிரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.
இன்று காலை திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் மர்மமானமுறையில் அவர் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது. லேசான ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் அதில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றும் போது திடீரென தீப்பிடித்தது.
- உடம்பில் தீ பிடித்து உடல் கருகி பலத்த காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 38). இவருக்கு பிரபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மீண்டும் தனது வீட்டுக்கு செல்ல முயன்ற போது பைக்கில் பெட்ரோல் இல்லை. இதனைத் தொடர்ந்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றினார்.
அப்போது திடீரென அவரது உடம்பில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது42). இவர் தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- விசேசத்திற்கு வந்த வாலிபர் கிணற்றில் குளிக்கசென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள அம்மாபட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சமயராஜ் மகன் அருணாச்சலம் (வயது 26).
இவர் சம்பவத்தன்று தனது உறவினர்வீட்டு வசந்த விழாவிற்காக வேலப்பர் கோவில் சென்றார். அங்குள்ள கிணற்றில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.
- இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குஜிலியம்பாறை முத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). இவருக்கு சுந்தரதேவி என்ற மனைவி, 2 மகன்களும் உள்ளனர்.
கொத்தனார் வேலை பார்த்துவந்த பிரேம்குமார் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.