நிலக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி காங். நிர்வாகி பலி

பைக் விபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பலியானார்.போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. காலனியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 28). இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலக்கோட்டை இளைஞரணி நகரச் செயலாளராக உள்ளார். நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று இரவு சென்று விட்டு நிலக்கோட்டை- வத்தலக்குண்டு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். டவர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முத்து (24) என்பவரின் பைக் நேருக்கு நேராக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த கவுதம் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த அவரது உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் முத்து கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com