போடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடியை சேர்ந்தவர் நல்லகாமு மகன் காமராஜ் (வயது 36). இவர் தனது நண்பர் கருப்பையா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி-தேனி சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த 2பேரையும் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிசிக்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com