நெல்லை அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு

விக்னேஷ் நேற்றிரவு வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு
Published on

நெல்லை:

வள்ளியூர் பகுதியில் வசித்து வந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31).

இந்நிலையில் விக்னேஷ் நேற்றிரவு நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொன்னாக்குடி வெள்ள நீர் கால்வாய் புதிய பாலம் அருகே விக்னேஷ் சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர் பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர்.

தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக நெல்லை அரசு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மே லும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்ப டுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com