வேடசந்தூரில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி

பைக்கில் சென்ற வாலிபர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். படுகாயமடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகில் உள்ள விருதலைப்பட்டி மக்கள் நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வருகிறார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

மினுக்கம்பட்டி பிரிவு அருகே சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் அவர் கீழே விழுந்து எழ முடியாமல் தவித்து வந்தார்.

பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com