search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banana and tomato crops"

    • திருக்குறுங்குடி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன.

    வாழைகள் 3 மாதமான ஏத்தன் ரகத்தை சேர்ந்தவை ஆகும். இவைகள் அப்பகுதியை சேர்ந்த குருநாதன், லெட்சுமணன், சண்முகசுந்தரம், முருகராணி உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகளை விரட்ட வழியின்றி தவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் காட்டு பன்றிகள் அட்டகாசம் குறித்து திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் பன்றிகளை விரட்ட எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். வனப்பகுதியில் இருந்து வெளி வந்த பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் அங்குள்ள கால்வாய்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அட்டகாசம் செய்து வரும் காட்டு பன்றிகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×