search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker injured"

    • தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
    • அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 45), பனைத்தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். பினனர் ஜாமினில் வெளியே வந்தவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    அதன்பேரில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் தலைமையில் ஏட்டு காளிமுத்து (35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவை கூறி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

    அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று சட்டை அணிந்து வருவதாக கூறி சென்றவர் அரிவாளுடன் வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.

    இதை தடுக்க முயன்ற ஏட்டு காளிமுத்துவுக்கு கை, கால்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார் உடனே சுதாரித்துக் கொண்டு ஜேசுராஜாவை வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரை தள்ளி விட்டு ஜேசுராஜா தப்பியோடி உள்ளார். போலீசார் அவரை விரட்டி சென்றனர்.

    ஒரு பனை மரத்தில் ஏறிய போது ஜேசுராஜா தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. அவரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்தவரை வேலைக்கு அழைத்தார்.
    • இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டது. பழுதை சரிபார்ப்பதற்கு உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 45) என்பவரை வேலைக்கு அழைத்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்ற ஆனந்த் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி ஆனந்தை மீட்டனர்.

    கிணற்றில் தவறி விழுந்ததில் ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
    • தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மினிவேனை விட்டு கீழே இறங்கியதும் அந்தப் பகுதியில் இருந்த தேனீக்கள் திடீரென அந்த 26 பெண் தொழிலாளர்களையும் கொட்டத் தொடங்கியது. இதனால் அந்த பெண்கள் அலறடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பின்னர் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • நாராயணன் சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள சத்திரங்காட்டில் பதநீர் இறக்கி வருகிறார்.
    • களக்காடு தனியார் மருத்துவமனையில் நாராயணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் அவரிவிளை தெருவை சேர்ந்தவர் மணி மகன் நாராயணன் (வயது 34). இவருக்கு அருணா என்ற மனைவியும் 1 பெண் குழந்தையும் உள்ளனர். நாராயணன் பனை மரம் ஏறும் தொழிலாளி. சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள சத்திரங்காட்டில் பதநீர் இறக்கி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் பனை மரம் ஏறிய போது, திடீர் என எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால்கள், முதுகு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங் பொருளாளருமான ரூபி மனோகரன் நாராயணனை சந்தித்து நிதி உதவி வழங்கினார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    மேலும் பனை மர தொழிலாளர் நல வாரியத்திற்கு பரிந்துரை செய்து, காயமடைந்த நாராயணனுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, ஜார்ஜ்வில்சன், முத்துராமலிங்கம், சந்திரசேகர், குணசேகரன், துரை அலெக்ஸ் உள்பட பலர் சென்றனர்.

    • லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
    • கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    குடியாத்தத்தில் கல்குவாரி வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளிக்கு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் கல்லேரி பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில், பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். பாறைகளை பிளக்க டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி அடங்கிய வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைக்கிறார்கள்.

    வெடி சிதறும் பாறைகளை சிறு, சிறு கற்களாக உடைத்து ஜல்லி தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனர். இப்படி, அதே பகுதியை சேர்ந்த தசரதன் (வயது 27) என்கிற தொழிலாளி, கல் கம்பம் நடுவதற்காக பாறைகளை நீளமாக பிளக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    பெரிய பாறைகளாக இருந்தால், அவற்றில் சிறு சிறு துளையிட்டு கொஞ்சம் வெடி மருந்துகளை நிரப்பி வெடி வைத்துபிளந்துள்ளார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த தசரதன் தன் பக்கத்தில் வெடி மருந்துகளை வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் கூலித்தொழிலாளி தசரதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற தொழிலாளர்கள் சற்று தொலைவில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உயிருக்கு போராடிய தொழிலாளியை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தசரதனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    வல்லம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    வல்லம் அருகே அற்புதாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது40). இவர் நேற்று திருக்கானூர்பட்டிக்கு பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ இவர் மீது மோதியதில் பால்ராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தஞசை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த சுந்தர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பிளாட் பாரத்தின் மேற்கூரையை அகற்றும்போது ஊழியர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ஆலுந்தூர்:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் தொங்கியபடி ரெயில் பயணம் செய்த 5 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். இதற்கு காரணமான தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    அதற்கு சாத்தியம் இல்லாததால், விபத்தில் நடந்த பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது பிளாட் பாரத்தை 3 அடி தூரம் நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்காக பிளாட் பாரத்தின் மேற்கூரையை அகற்றும் போது சுமேஷ் (30) என்ற ஊழியர் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (65) தேயிலை தோட்ட கூலி தொழிலாளி. இவர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தேயிலை செடிகளை ஒட்டி புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று பாலசுப்ரமணியத்தை நோக்கி ஓடி வந்ததுடன் அவரை கொம்புகளால் குத்தி கீழே தள்ளியது.

    இதில் பாலசுப்ரமணியத்தின் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தவரை அக்கம் பக்கத்தார் மீட்டனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குந்தா வனச்சரகர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் சந்தை தோப்பு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக மணிவேல் (வயது 49) என்பவரும், உதவியாளராக பண்ருட்டி சத்திய மூர்த்திதெருவை சேர்ந்த கண்ணன் (39) என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று இரவு 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கம் உள்ள ஜன்னல் வழியாக திடீரென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கடையின் உள்ளே விழுந்த பெட்ரோல் குண்டு தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் கண்ணன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வடலூர் அருகே உள்ள கருங்குழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர் ஒருவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம மனிதர்கள் சிலர் வந்தனர். டாஸ்மாக்கடை முன்பு போலீஸ் இருப்பதை பார்த்ததும் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்எண்ணை பாட்டிலை டாஸ்மாக்கடை முன்பு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்மியம்பேட்டை-செம் மண்டலம் இணைப்பு சாலையில் உள்ள டாஸ் மாக் கடையில் மர்ம மனிதர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதுபோல நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம மனிதர்கள் புகுந்து டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து சூறையாடினார்கள். அங்கிருந்து மதுபாட்டில்களையும் உடைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதால் டாஸ் மாக்கடை ஊழியர்கள் அச்சமடைந்தள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டாஸ்மாக்கடை மீது பெட்ரோல்குண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட் ரோல் குண்டு வீசியதில் சேத மடைந்தகடையை நேற்று இரவு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையத்தில் சூறையாடப்பட்ட டாஸ்மாக் கடையையும் பார்வையிட்டார்.

    அதன்பின்பு அவர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து பெட்ரோல்குண்டு வீசப்பட்டு வருகிறது. மேலும் ஒருசில வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள், அரசு பணிமனை மற்றும் பஸ் நிலையங்களுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்படும் என்றார். 

    உடுமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை காட்டு யானை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகத்தில் உள்ள தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பரமன் (69) . கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை பரமனை தூக்கி வீசியது. அவர் உயிர் தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை துரத்தி தாக்கியது. இதில் பரமன் படுகாயம் அடைந்தார் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    பொதுமக்கள் கூட்டமாக வருவதை பார்த்த யானை காட்டுக்குள் சென்று விட்டது. படுகாயம் அடைந்த பரமனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×