சின்னமனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி படுகாயம்

கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்தவரை வேலைக்கு அழைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டது. பழுதை சரிபார்ப்பதற்கு உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 45) என்பவரை வேலைக்கு அழைத்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்ற ஆனந்த் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி ஆனந்தை மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்ததில் ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com