களக்காடு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி படுகாயம்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிதியுதவி

நாராயணன் சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள சத்திரங்காட்டில் பதநீர் இறக்கி வருகிறார். களக்காடு தனியார் மருத்துவமனையில் நாராயணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளிக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கிய காட்சி.
மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளிக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கிய காட்சி.
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் அவரிவிளை தெருவை சேர்ந்தவர் மணி மகன் நாராயணன் (வயது 34). இவருக்கு அருணா என்ற மனைவியும் 1 பெண் குழந்தையும் உள்ளனர். நாராயணன் பனை மரம் ஏறும் தொழிலாளி. சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள சத்திரங்காட்டில் பதநீர் இறக்கி வருகிறார்.

சம்பவத்தன்று அவர் பனை மரம் ஏறிய போது, திடீர் என எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால்கள், முதுகு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங் பொருளாளருமான ரூபி மனோகரன் நாராயணனை சந்தித்து நிதி உதவி வழங்கினார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

மேலும் பனை மர தொழிலாளர் நல வாரியத்திற்கு பரிந்துரை செய்து, காயமடைந்த நாராயணனுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, ஜார்ஜ்வில்சன், முத்துராமலிங்கம், சந்திரசேகர், குணசேகரன், துரை அலெக்ஸ் உள்பட பலர் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com