மொபட் மீது கார் மோதல்; தொழிலாளி படுகாயம்

லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மொபட் மீது கார் மோதல்; தொழிலாளி படுகாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com