search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruby Manokaran MLA"

    • கடந்த 3 மாதமாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் புதிய நீர் மூழ்கி மோட்டாரை வாங்கிக் கொடுத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மேல கோடன்குளம் கிராமம்.

    இந்த ஊரில் உள்ள பொதுமக்களுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மின் மோட்டார் பழுதானது. கடந்த 3 மாதமாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். தண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

    இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம், பழுதாகிக் கிடக்கும் ஊர் மின் மோட்டாரை சரிசெய்து தருமாறு, அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவிலேயே, புதிய நீர் மூழ்கி மோட்டாரை அந்த ஊர் மக்களுக்கு வாங்கிக் கொடுத்தார். பின்னர் அது உடனடியாக பொருத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த பகுதிக்கு தற்போது தண்ணீர் விநியோகம் தொடங்கியது. கடந்த 3 மாதமாக தடைப்பட்டிருந்த தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்த தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு மேலகோடன்குளம் கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

    • ஆட்டோ டிரைவர் கணேசனின் மகள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
    • கண்ணம்மாள் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை யூனியன், கீழநத்தம் கீழூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மகள் கண்ணம்மாள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது வெளி யான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கண்ணம்மாள் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    குடும்ப த்தின் ஏழ்மை நிலையிலும் அவர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை பாராட்டி தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார தலைவர் கனகராஜ் உடன் இருந்தார்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை. வாழ்த்தினர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை ஒன்றியம் பாளை வடக்கு வட்டாரத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் நொச்சி குளம் பஞ்சாயத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடா சலபதி பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு தனது பிறந்த நாளை கேக்வெட்டி அன்னதானம் வழங்கி கட்சி நிர்வாகிகளுட னும், ஊர் பொது மக்களுடனும் கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர் குளோரிந்தாள், பாளை மேற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், சீனிவாசன், ஆனந்தி சந்திரசேகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், நொச்சிகுளம் கிருஷ்ணாபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துக்கென்னடி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை வாழ்த்தினர்.

    • பாலையா தனது பேரன் கார்த்திக் உடன் முன்னீர்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • தாத்தா-பேரன் இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 75).

    விபத்தில் சிக்கிய தாத்தா-பேரன்

    இவர், நேற்று தனது பேரன் கார்த்திக் (8) உடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரியில் இருந்து முன்னீர்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருவரும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

    அப்போது அந்த வழியாக தற்செயலாக வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், தனது காரில் இருந்து இறங்கி காயம் அடைந்த தாத்தா-பேரன் இருவரையும் மீட்டதோடு, அவர்களை தனது காரிலேயே நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    சிகிச்சை

    சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாத்தா-பேரன் இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன. தற்போது இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

    சாலை விபத்தில் காயம் அடைந்த தாத்தா-பேரன் இருவரையும் மீட்டு, தனது காரிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • சிறுபான்மை பள்ளிகளுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லை வந்தார்.

    ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மனு

    அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொரு ளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பின ருமான ரூபி மனோகரன் நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிறுபான்மை பள்ளி களுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல அனைத்து அரசு நலத்திட்ட ங்களையும் சிறுபான்மை பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    7.5 சதவீத இடஒதுக்கீடு

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை போல, நீதியரசர் கலையரசன் பரிந்துரைப்படி அதை 15 சதவீதமாக உயர்த்தி, அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    புதுமை பெண் திட்டம்

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் பெறுவது போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    இதுவரை அரசால் மதிய உணவு திட்டம் அரசு பள்ளி மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டமானது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட வில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையிலும் அந்த திட்டத்தை விரிவு படுத்திட வேண்டும்.

    உதவித்தொகை

    கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒன்றிய அரசால் வழங்கப் பட்டு வந்த சிறுபான்மை மாண வர்களின் கல்வி உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை பள்ளிகளில் தகுதியான காலி இடங்களில் முறையான விதிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அரசு ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவர்கள் ஊதியம் பெறாமலேயே ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நியமன ஒப்புதல் வழங்கி அவர்களுக்கு ஊதியம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • பாரதீய ஜனதா ஆட்சி, பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருக்கிறது என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ரூபி மனோகரன் தெரிவித்தார்.

    நெல்லை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும் பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

    இதையொட்டி, தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில், சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் காங்கிரஸார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வெற்றியை கொண்டாடினார்கள்.

    பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லை என்பதையே, கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்களது காங்கிரஸ் பேரியக்கம் பெற்றுள்ள அபார வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

    இந்த பாரதீய ஜனதா ஆட்சி, பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருக்கிறது. ஏழைகளும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    வேலை வாய்ப்பின்மை பெருகி விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    மக்களின் இந்த அதிருப்தி, கர்நாடக தேர்தலில் எதிரொலித்து இருக்கிறது. இனி, இது நாடு முழுவதும் தொடரும்.

    கர்நாடகாவில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தொடக்கம்தான். வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் நானும் 22 நாட்கள் ஈடுபட்டு இருக்கிறேன். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான மிகப்பெரிய எழுச்சியை கண்கூடாக காண முடிந்தது. அதன் வெளிப்பாடாகவே தேர்தல் முடிவும் அமைந்தது.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொடரும். ராகுல்காந்தி, இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவது உறுதி.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு வட்டாரத் திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட செங்களாக்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள கட்டளை கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சரியான மின்சார சேவை தேவை என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கட்டளை கிராமத்திற்கு மின்சார துறை அதிகாரிகள் உதவியுடன் புதியதாக மின் மாற்றி அமைத்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அதன் பின்பு சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தையும், டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அலெக்ஸ் மற்றும் களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காங்கிரஸ் ஊடக பிரிவு ஸ்ரீதேவி மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான்.
    • தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழிலாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான். உலகம் முழுவதும், இவர்களின் தினசரி 8 மணி நேர வேலையை உறுதிப் படுத்திய வரலாற்று சிறப்புமிக்க நாள்தான் மே1

    தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழி லாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். உழைப்பே உயர்வு என்பது நம்முடைய பொன்மொழி. வெற்றியை தேடி உழைப்ப வர்கள் மட்டுமே தங்களு டைய வாழ்க்கையில் அந்த வெற்றியைப் பெற முடியும்.

    இன்று உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய அனை வருமே கடுமையாக உழைத்த வர்கள்தான். அவ ர்களின் அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். அவர்கள் பெற்றுள்ள வெற்றி. உழைக் காமல் வரக்கூடிய உயர்வும், செல்வமும் ஒருபோதும் நிலைக்காது.

    உழைக்கக்கூடிய மக்க ளால் உயர்ந்துள்ள நாடு நம் இந்தியா.

    இந்த பெருமைமிக்க மே தின நன்னாளில், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய மே தின நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கின்றேன். உழைக்கும் மக்கள் அனை வரும் தங்கள் வாழ்வில் உயர்வும், மகிழ்ச்சி யும், ஆரோக்கியமும் பெற்று சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கின்றேன்.

    இவ்வாறு அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தது.
    • விவசாயிகள் கடன் பெற்றுத்தான் வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் உள்ள கருநீலங்குளம், மஞ்சுவிளை, பத்மநேரி, மேலபத்தை, கீழபத்தை, பெருமாள்குளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து இருக்கிறார்கள்.

    பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றுத் தான் இந்த வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வாழை மரங்கள் தற்போது சேதம் அடைந்திருப்பதால், அவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    அதனால், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • பட்டப்படிப்பு படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும்
    • இந்தியா முழுவதும் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெறும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பார்வையாளர்கள்

    இந்நிலையில் கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பார்வையா ளர்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை நியமித்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களில் தமிழக காங்கிரஸ் பொருளா ளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் ஒருவர்.

    பொதுக்கூட்டம்

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் கர்நாடக மாநி லத்தை சேர்ந்த குடும்பத் தலை விகள் ஒவ்வொரு வருக்கும் மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும், பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும், பட்டப்படிப்பு படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும், மின்சாரம் மாதம் 200 யூனிட் வரை இலவசம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராகுல்காந்தி வழங்கினார்.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் கலந்து கொண்டார்.

    பேட்டி

    இது குறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று சென்னையில் நிரு பர்களிடம் கூறிய தாவது:-

    கர்நாடக மாநில சட்ட மன்ற தேர்தலில் மிகப்பெரிய மக்கள் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிரான மன நிலையில் அனைவரும் இருக்கிறார்கள். அங்கே பாரதீய ஜனதா கட்சிக்கு ள்ளும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் காங்கிரஸ் பக்கம் வந்து விட்டார்கள்.

    பாரதீய ஜனதா அரசை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் முடிவுக்கு கர்நாடக மக்களும் வந்து விட்டார்கள். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் பெறப்போகும் இந்த வெற்றிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெறும். இது உறுதி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெறப்போகும் வெற்றிக்கு முதல் படியாக இந்த கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டணம் செலுத்தி மண் எடுக்கும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
    • அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

    அதில் பேசும்போது, செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் விவசாயிகள், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களால், அதை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    அதனால், 2011-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தபடி, அதாவது, அரசுக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகள் மற்றும் தனியார் நிலங்களில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு, அரசாங்கத்திடம் உரிய கட்டணம் செலுத்தி, அந்த வண்டல் மண்ணை எடுக்கும் முறைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழில் செய்வோர், செங்கள் சூளை நடத்துவோர் மற்றும் விவசாயிகள் பயன் அடைவார்கள், என்றார்.

    அமைச்சர் பதில்

    இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-

    செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எளிதாக கிடைக்கும் வகையில் இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    3 வகைகள்

    அரசு விதிகளின்படி மூன்று வகையில், அவர்கள் அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். முதல் விதியின்படி, மணல் எடுக்கக்கூடிய பட்டா நிலத்தில், அங்கே மணல் குவாரி செயல்படவில்லை என்கிற சான்றிதழ் பெற்று, ஒரு வருட காலத்துக்கு அனுமதி பெற்று மணல் எடுக்கலாம்.

    இரண்டாவது, உரிய இடத்தில் மணல் எடுக்க, மாவட்ட கலெக்டரிடம் அனுமதிக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மணல் எடுக்கக்கூடிய இடத்தில் குவாரி செயல்படவில்லை என்கிற தடையில்லாச் சான்று பெற வேண்டும். கலெக்டர் அனுமதி தந்த பிறகு, ஒன்றரை மீட்டர் ஆழம் வரை அங்கே மணல் எடுத்துக்கொள்ளலாம்.

    மூன்றாவது, ஏரி, குளம் ஆகியவற்றில் மணல் எடுக்கக்கூடிய அனுமதியை மாவட்ட கலெக்டரே வழங்குவார். அந்த அனுமதியைப் பெற உரிமைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

    செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள், விவசாயிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற வகையில், முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், அவர்கள் வண்டல் மண் எடுக்க எளிமையான விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    • கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால் இளங்கோ அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது 72). இவர் களக்காடு புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக தனது மோட்டார் சைக்கி ளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது நாங்குநேரி-களக்காடு சாலையில் அமைந்துள்ள கிறிஸ்டோபர் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக உடனடியாக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், பெரும்பத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத் திற்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரது மனைவி மேரி மற்றும் மகன் பால் இலக்கிய செல்வன், மகள் ஜென்ஸி பாக்கியரதி ஆகியோர் பால் இளங்கோவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார் என்றும் கூறினார்கள்.

    விபத்து குறித்த தகவல்களை போலீஸ் சரியாக விசாரிக்காமலும், உறவினர்களிடம் சரியான பதில் சொல்லா மலும், உதாசின படுத்தியதாக எம்.எல்.ஏ. விடம் கூறினர்.

    விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியாகவும், குடும்ப தலைவரை இழந்த குடும்பத் திற்கும், உறவினர்களிடமும் விபத்து குறித்த அறிக்கையை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்கள்.

    உடனே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டியன், வட்டார தலைவர்கள் வாகை துரை, ராமஜெயம், நிர்வாகிகள் ஜெயசீலன், ராமநாதன், சுந்தர், வின்சென்ட், குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×