search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka state Election"

    • பட்டப்படிப்பு படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும்
    • இந்தியா முழுவதும் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெறும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் பார்வையாளர்கள்

    இந்நிலையில் கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பார்வையா ளர்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை நியமித்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களில் தமிழக காங்கிரஸ் பொருளா ளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் ஒருவர்.

    பொதுக்கூட்டம்

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் கர்நாடக மாநி லத்தை சேர்ந்த குடும்பத் தலை விகள் ஒவ்வொரு வருக்கும் மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும், பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும், பட்டப்படிப்பு படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும், மின்சாரம் மாதம் 200 யூனிட் வரை இலவசம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராகுல்காந்தி வழங்கினார்.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் கலந்து கொண்டார்.

    பேட்டி

    இது குறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று சென்னையில் நிரு பர்களிடம் கூறிய தாவது:-

    கர்நாடக மாநில சட்ட மன்ற தேர்தலில் மிகப்பெரிய மக்கள் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிரான மன நிலையில் அனைவரும் இருக்கிறார்கள். அங்கே பாரதீய ஜனதா கட்சிக்கு ள்ளும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் காங்கிரஸ் பக்கம் வந்து விட்டார்கள்.

    பாரதீய ஜனதா அரசை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் முடிவுக்கு கர்நாடக மக்களும் வந்து விட்டார்கள். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் பெறப்போகும் இந்த வெற்றிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெறும். இது உறுதி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெறப்போகும் வெற்றிக்கு முதல் படியாக இந்த கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×