search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர் மகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசு
    X

    மாணவி கண்ணம்மாளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டிய காட்சி.

    10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர் மகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசு

    • ஆட்டோ டிரைவர் கணேசனின் மகள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
    • கண்ணம்மாள் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை யூனியன், கீழநத்தம் கீழூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மகள் கண்ணம்மாள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது வெளி யான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கண்ணம்மாள் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    குடும்ப த்தின் ஏழ்மை நிலையிலும் அவர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை பாராட்டி தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார தலைவர் கனகராஜ் உடன் இருந்தார்.

    Next Story
    ×