search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுவது போல சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும்  வழங்க வேண்டும் -அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மனு கொடுத்த போது எடுத்த படம். அருகில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர். 

    அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படுவது போல சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும் -அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • சிறுபான்மை பள்ளிகளுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லை வந்தார்.

    ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மனு

    அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொரு ளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பின ருமான ரூபி மனோகரன் நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிறுபான்மை பள்ளி களுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல அனைத்து அரசு நலத்திட்ட ங்களையும் சிறுபான்மை பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    7.5 சதவீத இடஒதுக்கீடு

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை போல, நீதியரசர் கலையரசன் பரிந்துரைப்படி அதை 15 சதவீதமாக உயர்த்தி, அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    புதுமை பெண் திட்டம்

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் பெறுவது போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    இதுவரை அரசால் மதிய உணவு திட்டம் அரசு பள்ளி மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டமானது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட வில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையிலும் அந்த திட்டத்தை விரிவு படுத்திட வேண்டும்.

    உதவித்தொகை

    கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒன்றிய அரசால் வழங்கப் பட்டு வந்த சிறுபான்மை மாண வர்களின் கல்வி உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை பள்ளிகளில் தகுதியான காலி இடங்களில் முறையான விதிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அரசு ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவர்கள் ஊதியம் பெறாமலேயே ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நியமன ஒப்புதல் வழங்கி அவர்களுக்கு ஊதியம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×