search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers"

    • விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என்று 176 பேர் பயணித்தனர்.

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, சரக்கு பெட்டி இருந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானத்தை தரையிறக்க கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார்.

    ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் சில ஓடுபாதைகளில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாய் விமானத்தை அங்கு உடனடியாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்பு அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்பு விமானத்தில் வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புகை வந்தது உடனடியாக கவனிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

    மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுகிறோம்.
    • கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியு ள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி வருகிறது.

    ராமநாதபுரம், காரை க்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோ ட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதி யிலிருந்து சென்னையில் வசித்து வரும் பொது மக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாள ர்கள், மாணவ மாணவிகள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சென்ற ஆண்டு சிறப்பு ரயிலை இயக்கியது போல் (சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் வண்டி எண் 06041/06042) இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டு க்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ரயில் தடத்தின் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுகிறோம்.

    இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து போக்கு வரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் கூறியிருப்பதாவது:

    நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி திருவிழா, ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி.

    புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென் னைக்கும், சென்னை யிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியி லிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும்.

    திருச்சி யிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் இயக்கப்பட வுள்ளன.இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவா் ஊா்களுக்கு செல்ல 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவுக்கும் செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    அனைத்து போக்கு வரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோ தகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
    • மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரவி, கருப்பையா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கி ருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் திருடன்...திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    எல்லீஸ் நகர் பாலம் கீழ்ப்பகுதியில் பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப் பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    சுதந்திரதின விழாவை யொட்டி திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மேற்பார்வையில் கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், கும்பகோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து ரெயில்வே போலீசார்கள் கூறியதாவது, சுதந்திரதின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பா விதமும் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ரெயில் நிலையத்திற்கு உள்ளே கொண்டு வரப்படும் பார்சல்கள், வெளியே கொண்டு செல்லும் பார்சல்கள் அனைத்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்படு கின்றன. இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ரெயிலில் ஏறி சென்று பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
    • சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரும் சுற்றித்திரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தஞ்சாவூர் ரெயில்வே நிலையத்தில் இன்று ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் அனைவரையும் நுழைவு வாயில் முன்பே நிறுத்தி சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடைபாதை, தண்டவாளம், பார்சல் அலுவலகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை செய்தனர். மேலும் ரெயிலில் ஏறி சென்று பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரும் சுற்றி திரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.

    இதேப்போல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில் பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கொண்டு வரும் உடைமைகளை எந்திரத்தின் வழியாக ஸ்கேன் செய்து பார்க்கும்போது உள்ளே, தடை செய்யப்பட்ட பொருட்கள், போதை பொருட்கள் இருப்பதை கண்டறியும் வகையில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, "தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டறியலாம்" என்றார்.

    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மாதவரம்:

    ஆந்திராவில் இருந்து மாதவரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை ஆந்திரா அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30 பயணிகன் இருந்தனர். புழல், சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

    பஸ்சில் இருந்து புகை வந்ததும் பயணிகளை டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
    • திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர்.

    தென்காசி:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் திங்கள் கிழமை விடுமுறை எடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, தென்மா வட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறப்பு ரெயிலை தாம்பரம்-நெல்லை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்க இருக்கிறது.

    சென்னை முதல் நெல்லை வரை ஒரு வழிபாதை இருக்கும்போதும் ஒரே சிறப்பு ரெயில் தான் இயக்கப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் சூழலிலும் ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்குவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், சரியான நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். அப்படியும் இணைய தளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன.

    இதனால், தட்கல் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு மையங்களில் காத்திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரெயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    இதுகுறித்து தென்காசியை சார்ந்த ரெயில் பயணிகள் கூறுகையில்,

    தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் ஒரே ஒரு ரெயிலை மட்டும் இயக்குவது வேதனை அளிக்கிறது.

    சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படும் நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழ மைகளில் சென்னையில் காலியாக இருக்கும் ரெயில் பெட்டிகளை பயன்படுத்தி தாம்பரத்திலிருந்து மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் சுதந்திர தினம் முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய் கிழமை நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

    தற்போது சென்னை- நெல்லை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என்பதால் சிறப்பு ரெயில்கள் அதிகமாக இயக்க முடியும். எனவே பயணிகளின் நலன் கருதி தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கீழடியில் நிழற் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லா கான், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுப்பையா, ராமு, தி.மு.க. கிழக்கு ஒன் றியச் செயலர் கடம்பசாமி, நகரச் செயலர் நாகூர்கனி, நிர்வாகி கள் மகேந்திரன், இளங்கோவன், ரவி, கோபால், தேவதாஸ், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பேராவூரணியில் இரவு ஒரு நிமிடம் நின்று சென்றது.
    • அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, துணைச் செயலாளர் கௌதமன், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் பாரதி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

    திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06004) தாம்பரத்திற்கு நேற்று மாலை 3.40 மணியளவில் சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது.

    இந்த ரயில் பேராவூரணியில் இரவு.9.30மணிக்கு 1 நிமிடம் நின்று சென்றது. இதில் 35 பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். 23 பயணிகள் முன்பதிவு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி ராஜேந்திரன் கூறியதாவது, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலில் பேராவூரணியில் இருந்து 35 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

    எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை மற்றும் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என கூறினார்.

    • பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

    இந்த நிலையில் பயணிகளில் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06035) செப்டம்பர் 23-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று அடையும்.

    மறுமார்க்கமாக வேளா ங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06036) செப்டம்பர் 24-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என்று திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது

    ×