search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவி"

    • விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார்.
    • இதில் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்,

    கரூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் தீபா கண்ணன் மருத்துவ மனையில் அதிநவீன லேப்ராஸ்கோப்பி கருவி (நுண்துளை அறுவை சிகிச்சை கருவி) திறந்து வைக்கப்பட்டது.

    விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார். சர்க்கரை மற்றும் தீவிர சிகிச்சை டாக்டர் நிரேஷ் கண்ணன் வரவே ற்றார். இக்கருவி குறித்து, டாக்டர் ராமசாமி கூறு ம்போது, அதிநவீன நுண்து ளை அறுவை சிகிச்சை கருவி மூலம் வயிற்றில் இருக்கும் உறுப்புகளின் பிரச்சினைகளை மிக துல்லியமாக அறிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால் ரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருக்கும். இந்த கருவி மூலம் பித்தபை, குடல் வால் நோய், குடல் இறக்கம், குடலில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற் கொள்ள முடியும் என்றார். கரூர் தீபா கண்ணன் மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை, குடல் நோய் மருத்துவ சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறைக்கு மத்திய அரசு என்.ஏ.பி.எச். சான்றிதழ் பெற்ற ஒரே மருத்துவமனை ஆகும். இந்த விழாவில் கரூர் கே.ஆர்.ஜி. மருத்துவமனை குடல், ஈரல் மற்றும் கணையம் சிகிச்சை டாக்டர் மணி கண்டன், கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் சதாசிவம், கரூர் ஸ்ரீ சக்கரா மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் ராஜ்நிகேதன், கரூர் கே.ஆர்.ஜி. மருத் துவமனை மகப்பேறு டாக்டர் கோமல் சிந்து, ஸ்ரீ சக்கரா மருத்துவமனை மயக்கவியல் டாக்டர் நித்யாபாரதி மற்றும் தீபா கண்ணன் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூடலூரில் சோதனை செய்யும் பணி தொடங்கியது.

    ஊட்டி,

    வனப் பகுதியை ஒட்டி கூடலூா் அமைந்துள்ளதால் அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க மாவட்டத்தில் முதல் முறையாக கூடலூா், தொரப்பள்ளி பகுதியில் ஒரு மின்மாற்றியைத் தோ்வு செய்து அங்கு நவீன கருவியை மின்வாரியத்தினா் பொருத்தியுள்ளனா்.

    இந்தக் கருவியில் உள்ள சா்க்யூட் பிரேக்கா் என்ற சிஸ்டம் காட்டு யானைகள் உரசியவுடன் தானாக மின்சாரத்தை துண்டித்துவிடும். அதனால் யானைகளின் உயிரிழப்புத் தடுக்கப்படும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

    முதுமலை புலிகள் காப்பக வன எல்லையில் தொரப்பள்ளி அமைந்துள்ளதால் அங்கு இந்தக் கருவியைப் பொருத்தி சோதனை முயற்சியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

    • பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில் பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கொண்டு வரும் உடைமைகளை எந்திரத்தின் வழியாக ஸ்கேன் செய்து பார்க்கும்போது உள்ளே, தடை செய்யப்பட்ட பொருட்கள், போதை பொருட்கள் இருப்பதை கண்டறியும் வகையில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, "தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டறியலாம்" என்றார்.

    • அரியலூரில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு புல் நொறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின், தீவன அபிவிருத்தி திட்டம் – மூலம் புல் நொறுக்கும் கருவி, 50 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நொறுக்கும் கருவி 40 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 50 சதவிகிதம் அரசு மானியத்திலும், 50 சதவிகிதம் பயனாளிகள் பங்குத்தொகை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் இதுவரை எந்த திட்டத்திலும் அரசு மானியத்தில் புல் நொறுக்கும் கருவி பெறாதவர்களாக இருக்கவேண்டும். மேலும் 0.25 ஏக்கர் நிலத்தில் தீவனபுல் பயிரிட்டு இருக்கவேண்டும். குறைந்தது 2 பசு அல்லது எருமை வளர்க்கும் விவசாயிகளுக்கு மின்சார புல் நொறுக்கும் கருவி வழங்கப்படும். பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை கிராமத்தில் நீலகிரி ஆதிவாசி நல சங்கம் சார்பில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் இல்லாமல் குறைந்த விலையில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பத்தில் தயாரான நீர் சுத்திகரிப்பு கருவிக்கான நண்ணீர் கிராம திட்டம்-2.0 வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-

    தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைப்பாடி, தேக்குபாடி, கார்குடி, லைட்பாடி ஆகிய 4 கிராமங்களில் 350 வீடுகள் உள்ளன. அங்கு இதுவரை 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இங்கு வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு இவர்களின் உயரம், எடை ஆகியை கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவையான சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனை பழங்குடி மகக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மசினக்குடி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

    அடுத்தபடியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நன்னீர் 1.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்திய பணிகள் குறித்த புகைப்படத்தை பார்வையிட்ட கலெக்டர் நன்னீர் கிராம திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வெங்கடேஷ், கூடலூர் வனஅதிகாரி கொம்மு ஒம்காரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணாதுரை, குமார், நாவா தலைவர் சண்முகம், செயலாளர் ஆல்வாஷ், திட்ட அதிகாரி பூவிழி (நன்னீர் கிராமம்) நாவா பொருளாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன.
    • சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகர பொறியாளர் வெங்கடேஷ், துணை கமிஷனர் சுல்தானா, நகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். மண்டல உதவி கமிஷனர்கள், பொறியியல் மற்றும் சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் முறையாக மாநகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தான் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    உரிய அனுமதி பெற்ற அனுபவமிக்க ஊழியர்கள் மட்டுமே அந்த வாகனங்களை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டி நடை முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    • ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து இலவச இருதய, சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்க தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன் தலைமை தாங்கினார்.

    ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் லயன் துரை ராயப்பன் முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க சாசன தலைவர் லயன் மருத்துவர் முகம்மது ஆரிப், மண்டல தலைவர் லயன் ஸ்ரீநாத், வட்டார தலைவர் லயன் கண்ணன், பொருளாளர் லயன் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நூற்றாண்டு அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த ஆலோசகர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 850-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும், 85- க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    இதில் சங்க உறுப்பினர்கள் லயன் நிஜாம் முகமது, லயன் கார்த்திகேயன், லயன் மாதவன், பொறியாளர் லயன் ரகு, லயன் மகேஷ், லயன் அகல்யா மணி , லயன் பார்த்திபன், லயன் ராஜ்மோகன், லயன் மாரியப்பன், கீழையூர் லயன் மோகன், லயன் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா சங்க செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

    ×