search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு புல் நொறுக்கும் கருவி
    X

    விவசாயிகளுக்கு புல் நொறுக்கும் கருவி

    • அரியலூரில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு புல் நொறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின், தீவன அபிவிருத்தி திட்டம் – மூலம் புல் நொறுக்கும் கருவி, 50 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நொறுக்கும் கருவி 40 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 50 சதவிகிதம் அரசு மானியத்திலும், 50 சதவிகிதம் பயனாளிகள் பங்குத்தொகை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் இதுவரை எந்த திட்டத்திலும் அரசு மானியத்தில் புல் நொறுக்கும் கருவி பெறாதவர்களாக இருக்கவேண்டும். மேலும் 0.25 ஏக்கர் நிலத்தில் தீவனபுல் பயிரிட்டு இருக்கவேண்டும். குறைந்தது 2 பசு அல்லது எருமை வளர்க்கும் விவசாயிகளுக்கு மின்சார புல் நொறுக்கும் கருவி வழங்கப்படும். பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், அலைபேசி எண், ஆதார் எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×