search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய நவீன கருவி
    X

    பயணிகளின் உடமைளை ஸ்கேனிங் செய்யும் கருவி காட்சி.

    மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய நவீன கருவி

    • பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில் பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கொண்டு வரும் உடைமைகளை எந்திரத்தின் வழியாக ஸ்கேன் செய்து பார்க்கும்போது உள்ளே, தடை செய்யப்பட்ட பொருட்கள், போதை பொருட்கள் இருப்பதை கண்டறியும் வகையில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, "தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டறியலாம்" என்றார்.

    Next Story
    ×