search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GPS equipment"

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன.
    • சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் 100 வாகனங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகர பொறியாளர் வெங்கடேஷ், துணை கமிஷனர் சுல்தானா, நகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். மண்டல உதவி கமிஷனர்கள், பொறியியல் மற்றும் சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் முறையாக மாநகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். சேகரிக்கும் கழிவுகளை நீர் வழிப்பாதை உள்ளிட்ட பொது வெளியில் கொட்டக்கூடாது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தான் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    உரிய அனுமதி பெற்ற அனுபவமிக்க ஊழியர்கள் மட்டுமே அந்த வாகனங்களை இயக்க வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டி நடை முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    • கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தேனி நகர்‌ சாலையில் இரயில்வே மேம்பாலமும்‌ அமையவுள்ள இடங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கனிம வளத்துறையின் சார்பில் குவாரிகளிலிருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

    தமிழக அரசு குவாரிகளிலிருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்திட உத்தரவிட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 32 உடைகல் குவாரி, 9 மண் குவாரி, 4 கிராவல் குவாரிகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்திட வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதனை முறையாக கண்காணித்திட வேண்டும்.

    மேலும், அமைப்பு சாரா தொழில்களில் ஒன்றான குவாரி தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், காப்பீடு செய்தல், விபத்து காப்பீடு செய்தல் போன்றவற்றை தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை (சமூக பாதுகாப்பு திட்டம்) தொடர்பு கொண்டு, குவாரியில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் பட்டியலை அந்தந்த தொழிலாளர்களுடன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி நெடுஞ்சாலை கட்டுமானம்‌ மற்றும்‌ பராமரிப்பு கோட்டத்தின்‌ மூலம்‌ கொச்சின்‌ - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில்‌ கொட்டக்குடி ஆற்றுப்பாலம்‌ முதல்‌ மதுரை நோக்கி செல்லும்‌ சாலையில்‌ நேரு சிலை சந்திப்பில்‌ ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஓர்‌ பிரிவகை மேம்பாலம்‌ மற்றும்‌ நேருசிலை சந்திப்பு முதல்‌ பெரியகுளம்‌ செல்லும்‌ சாலையில்‌ இரயில்வே சந்திப்பில்‌ ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி நகர்‌ சாலையில் ஓர்‌ இரயில்வே மேம்பாலமும்‌ அமையவுள்ள இடங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ×