என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    பயணிகள் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யும் போலீசார்.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • ரெயிலில் ஏறி சென்று பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
    • சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரும் சுற்றித்திரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தஞ்சாவூர் ரெயில்வே நிலையத்தில் இன்று ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் அனைவரையும் நுழைவு வாயில் முன்பே நிறுத்தி சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடைபாதை, தண்டவாளம், பார்சல் அலுவலகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை செய்தனர். மேலும் ரெயிலில் ஏறி சென்று பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரும் சுற்றி திரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.

    இதேப்போல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×