என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
- பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கீழடியில் நிழற் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லா கான், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுப்பையா, ராமு, தி.மு.க. கிழக்கு ஒன் றியச் செயலர் கடம்பசாமி, நகரச் செயலர் நாகூர்கனி, நிர்வாகி கள் மகேந்திரன், இளங்கோவன், ரவி, கோபால், தேவதாஸ், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






