search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offensive"

    கபிஸ்தலம் அருகே ரேசன் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே புள்ளப்பூதங்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் விற்பனையாளராக பணியாற்றுபவர் சின்னப்பா (வயது 55) . இவர் நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு வழங்கி வந்துள்ளார்.

    அப்பொழுது பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மீண்டும் நாளை வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மபுரம் வடக்கு தெரு மோகன் (56) என்பவர் சின்னப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கு இருந்த மெஷின் மற்றும் மேஜை ஆகியவற்றை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து சின்னப்பா கபிஸ்தலம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    காஞ்சீபுரம் அரசு பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியை மீது 10-ம் வகுப்பு மாணவன் தாக்கிய சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் இடமாற்றம்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அய்யங்கார் குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    10-ம் வகுப்பில் ஆங்கில ஆசிரியையாக ஹேனா ஜீன் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று அவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு மாணவன் அனுமதியின்றி வகுப்பறையில் இருந்து வெளியே செல்ல முயன்றான். இதனை ஆசிரியை ஹேனா ஜீன் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் திடீரென ஆசிரியை ஹேனா ஜீனை தாக்கினான்.

    பள்ளி ஆசிரியர்கள் இது பற்றி தலைமை ஆசிரியர் பசுபதியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதியை அதிரடியாக இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    அவர் காஞ்சீபுரம் அருகே உள்ள முசரவாக்கம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யங்கார் குளம் அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பிரச்சினை தொடர்பாக 21 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலியில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் மரங்கள் விழுந்தும் வீடுகள் இடிந்தும் 30 பேர் பலியாகியுள்ளனர். #italystorm #heavyrain

    ரோம்:

    இத்தாலியில் கடந்த ஒரு வாரமாக மிரட்டிக் கொண்டிருந்த புயல் நேற்று கரையை கடந்தது. அப்போது பலத்த காயற்றுடன் மழை கொட்டியது. இதனால் வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இவை தவிர சிசிலி, தெற்கு சர்டினியா பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின. சிசிலி தீவில் தாஸ்டில் டாக்சியா என்ற பகுதி கடும் சேதம் அடைந்தது. அங்கு மிலிசியா என்ற ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அதில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அவர்களில் குழந்தைகளும், முதியவர்களும் அடங்குவர். அதே நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தில் இருந்து 3 பேர் மட்டும் மரங்களில் ஏறி உயிர் தப்பினர்.

    வெள்ளத்தில் சிக்கி 3 கார்கள் அடித்து செல்லப்பட்டன. அதில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்தும் வீடுகள் இடிந்தும் 17 பேர் பலியாகினர். இதுவரை 30 பேர் உயிர்ழந்தள்ளனர்.

    மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கி கிடக்கின்றன. 2 லட்சத்து 500 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த பைன்ஆப்பிள் தோட்டங்கள் அழிந்து விட்டன.

    கடும் பாதிப்புக்குள்ளான சிசிலியில் ரோடுகள் மூடப்பட்டன. பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொழுதுபோக்கு இடங்களை மூட மேயர் உத்தர விட்டுள்ளார். #italystorm #heavyrain

    ஆண்டிப்பட்டி அருகே செய்முறை செய்யாத தாயை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு வைகைநகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி(வயது58). இவரது மகன் ராம்குமார்(32). திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமார் தனது வீட்டில் விசே‌ஷம் வைத்திருந்தார். அதற்கு ஜெயக்கொடி செல்லவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் எதற்காக தனக்கு செய்முறை செய்யவில்லை எனக்கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

    இதேபோல் கண்டமனூர் வடக்குதெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அவரது மனைவி பாக்கியலட்சுமி(35) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை தாக்கி கொலை செய்ய முயன்றார்.

    இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஏராளமான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். #KPMunusamy #ADMK #Karunanidhi
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை ராணுவத்துக்கு உதவிய தி.மு.க.- காங்கிரசை கண்டித்து காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர்கள் வி.சாமசுந்தரம், மைதிலி, மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி.முனுசாமி, எம்.பிக்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், ஜெயவர்த்தன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-



    இலங்கையில் போர் நடந்த சமயம், அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற ஆயுதம் தாங்கிய போராளிகள் உருவானார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது அந்த போராளிகள் தமிழர்களை காப்பாற்ற தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் போராடுவதற்கும் பயிற்சியை மேற்கொள்ள தமிழ்நாட்டை நாடினார்கள், அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஆதரவு கொடுத்தார்.

    எம்.ஜி.ஆர். அரசியல் சட்டத்தை பற்றி கவலைப்படாமல், இறையாண்மையை பற்றி கவலைப்படாமல் தமிழ் குலம் எங்கிருந்தாலும் பாதுகாப்பு கொடுப்பேன் என்று அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். இந்திய திருநாட்டில் யாரும் செய்யமுடியாத அளவிற்கு ரூ.4 கோடியை விடுதலை போராளிகளுக்காக வழங்கினார். மறைமுகமாக பல்வேறு உதவிகளை ஸ்ரீவிடுதலைப் போராளிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்தார்.

    பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. 2008-2009ல் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தது. விடுதலைப்போராளிகள் இலங்கையின் தாக்குதலை முறியடிக்க கொரில்லா தாக்குதல் செய்து வெற்றி பெற்றார்கள்.

    இந்திய அரசு இலங்கை அரசுக்கு முறையாக ஆயுதம் வழங்காத வரை விடுதலை போராளிகள் வெற்றி பெற்றனர். அப்போது ராஜபக்சே மத்திய அரசை அணுகினார். இந்திய அரசிடம் உதவி கேட்டார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு விமானங்களை, ஹெலிகாப்டர்களை, வட்டியில்லாத கடனாக கொடுத்தது.

    அங்கு விடுதலைபுலிகளை சாய்ப்பதற்கும், இலங்கை தமிழர்களை அழிப்பதற்கும் இந்த உதவிகளை இந்திய அரசு வழங்கியது. இலங்கைக்கு நமது ராணுவ என்ஜினீயர்களை அனுப்பி வைத்தது. இந்த நிகழ்ச்சி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்.

    இலங்கையில் பதுங்கு குழியில் இருந்த தமிழ் பெண்கள், குழந்தைகள் வெளியே வந்தபோது இலங்கை அரசு போர் விமானங்களை அனுப்பி ஆயிரக்கணக்கான பேர்களை கொன்று குவித்தது. இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை தண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடிக் கொண்டிருக்கிறது.

    தி.மு.க.வில் கருணாநிதி இல்லையென்றால் ஸ்டாலின் இல்லை. அதே போன்று ராமதாஸ் அரசியலுக்கு வந்ததால்தான் அன்புமணி வந்தார். ஆனால் அ.தி.மு.க.வில் விசுவாசம் மிக்க அடிமட்டத் தொண்டன் கூட பதவிக்கு வர முடியும். ஆனால் தி.மு.க. வாரிசு அரசியல் செய்கிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்து தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் தி.மு.க. வினருக்கு பதவி மட்டுமே முக்கியம்.

    தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது கருணாநிதி சென்னையில் உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பின் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி விட்டது. அங்கு போர் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே என்னுடைய உண்ணாவிரதத்தினை முடித்துக் கொள்கிறேன் என கூறி உண்ணாவிரத நாடகத்தினை முடித்துக் கொண்டார். இவருடைய வார்த்தையினை நம்பி பதுங்கு குழியில் இருந்த பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் வெளியே வந்த போது தரை வழியாகவும் வான் வழியாகவும் இலங்கை தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது.



    இப்படி காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. செய்த துரோகத்தினை கடந்த வாரம் ராஜபக்சே அம்பலப்படுத்தினார். ஆட்சியினை தக்க வைக்க தமிழர்களின் தன்மானத்தினை விலையாகக் கொடுத்தவர் தான் கருணாநிதி. இன்று ஸ்டாலின் அ.தி.மு.க.வைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்கள் எனக் கூறுகிறார். தன்மானத்தோடு ஆட்சி செய்பவர்கள் நாங்கள். ஆனால் உங்கள் கட்சி அலுவலத்திலேயே சோதனை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு பதவி சுகத்திற்காக இன்றும் கூட்டணி வைத்துள்ள கட்சிதான் திமுக. எங்களைக் குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்குமார், பெரும்பாக்கம் ராஜசேகர், நிர்வாகிகள் தும்பவனம் ஜீவானந்தம், காஞ்சி பன்னீர் செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, டபிள்யூ.பி.ஜி.சரவணன், கரூர் மாணிக்கம், பாலாஜி. ஜெயராஜ் கலந்து கொண்டனர். #KPMunusamy #ADMK #Karunanidhi
    பாரதிய ஜனதா கட்சி இந்துக்களை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP

    மும்பை:

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதாவை கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வது போல, பாரதிய ஜனதா கட்சி இந்துக்களை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

    காங்கிரசாவது முஸ்லிம்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளது. ஆனால் பாரதிய ஜனதா இதை செய்வது இல்லை. தேர்தல் காலத்தில் மட்டும் இந்துத்வா கொள்கைகளை தாக்கி பிடிப்பது போல காட்டிக்கொள்வார்கள். மிக ஆவேசமாக நடந்து கொள்வார்கள்.

    தேர்தல் முடிந்து ஆட்சி கிடைத்துவிட்டால் அதன்பிறகு இந்துத்வா கொள்கைகளை மறந்து விடுவார்கள். இந்துத்வா என்ற ஏணி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உதவுகிறது. அதன்பிறகு அந்த ஏணி அவர்களுக்கு தேவையில்லை. எனவே தூக்கி எறிந்துவிடுகின்றனர்.

    தேர்தலுக்கு முன்பு இந்துத்வா தொடர்பான எத்தனையோ விதமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ராமர் கோவில் கட்டுவோம் என்றார்கள். ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றார்கள். இதில் ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றினார்களா?

     


    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிக்காக் கோவில் நடந்த உலக இந்து மாநாட்டில் பேசும்போது, இந்துக்களுக்கு ஆதிக்க எண்ணமும், ஆவேசமும் மனதில் வரவில்லை. இன்றைய சூழலில் அனைவரும் ஒன்று திரண்டு ஆவேசத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    கடந்த தேர்தலில் இப்படித்தான் இந்துக்களுக்கு ஆவேசம் வந்தது. இதன் காரணமாகத்தான் அனைவரும் ஒன்று திரண்டார்கள். இதன் மூலம் மோடி பிரதமர் ஆனார். ஆனால் நடந்தது என்ன?

    இந்துத்வாவுக்காக எப்போதும் குரல் கொடுத்து கொண்டிருக்கும் சிவசேனாவை முதுகில் குத்தினார்கள். இந்துத்வா கொள்கைகளையும், நாட்டு நலனையும் தீவிரமாக வற்புறுத்தி பேசுபவர்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிரியாக உள்ளனர்.

    சொந்த நாட்டிலேயே இந்துக்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கும் நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் எழுதப்பட்டிருக்கிறது. #ShivSena #BJP

    பள்ளிக்கரணையில் டிரைவரை தாக்கி கார் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேளச்சேரி:

    சென்னை பள்ளிகரணை ராம்நகர் சிக்னல் அருகே கால்டாக்சி டிரைவர் ஒருவரை வடமாநில வாலிபர் தாக்கி அவரது காரை கடத்தி சென்றார்.

    காரை கடத்தியவர் பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் வரை சென்ற போது பல இடங்களில் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றார்.

    தாம்பரத்தில் அவரை போக்குவரத்து போலீசார் பிடிக்க முயன்ற போது காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற பொதுமக்கள் பெருங்களத்தூர் அருகே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணை யில் அவனது பெயர் அனுஸ்மான் லியோனல் சிங் (29) என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து கடத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் அவன் காயம் அடைந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

    அரியானாவில் கோவிலுக்குள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் கர்ணால் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் பூசாரியாக வினோத் என்பவரும், அவருக்கு உதவியாக சுல்தான் என்பவரும் பணியாற்றி வந்தனர். மேலும், கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகியோர் ஊழியர்களாக இருந்தனர்.

    அவர்கள் இரவில் கோவிலிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த 5 பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் வினோத், சுல்தான் ஆகியோர் இறந்துவிட்டனர்.

    மற்ற 3 பேருடைய நாக்குகளையும் துண்டித்தனர். பின்னர் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    மறுநாள் காலை குழந்தைகளும், ஒரு குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றார்கள். அப்போது கோவில் வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டது.

    இதுபற்றி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 2 பேர் இறந்து கிடப்பதும், 3 பேர் நாக்கு அறுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே கொள்ளையர்கள் பணத்தை திருடிவிட்டு அவர்களையும் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நாக்கு துண்டிக்கப்பட்டதால் 3 பேராலும் பேச முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருப்பதால் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமானதற்கு பிறகு தான் நடந்த சம்பவம் என்ன என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

    கள்ளத் தொடர்பை கண்டித்ததால் பெண்ணை வீடு புகுந்து தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள எரதிமக்கால்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சற்குரு இவருக்கு திருமணமாகி அம்மா பிள்ளை என்ற மனைவியும், விஜயபாண்டி (24), செல்வம் (22) ஆகிய மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னமயில் (35), இவரது கணவர் இறந்து விட்டார்.

    இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். சற்குருவுக்கும் அன்னமயிலுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை அம்மாபிள்ளை மற்றும் அவரது மகன்கள் கண்டித்து வந்தனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று அன்னமயில் மற்றும் அவரது உறவினர் லெட்சுமி (வயது 60) ஆகிய 2 பேரும் அம்மா பிள்ளை வீட்டுக்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் 2 தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த அன்னமயில் க.விலக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாண்டி மற்றும் அவரது தம்பி செல்வத்தை கைது செய்தனர். மேலும் அம்மா பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அன்னமயில் மற்றும் லெட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தி.நகர் பாண்டிபஜாரில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.
    சென்னை:

    தி.நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள கிளப் ஒன்றில் நேற்று இரவு பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. காசிமேட்டை சேர்ந்த சுராஜ். தனது நண்பர்களுடன் இதில் பங்கேற்றார்.

    அப்போது விழாவுக்கு வந்திருந்தவர்கள் மது குடித்தனர். போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் பேட்ரிக், போண்டாமணி உள்ளிட்ட 5 பேர் ஒன்று சேர்ந்து சுராஜை சரமாரியாக கத்தியால் குத்தினர்.

    கிளப்பில் இருந்து குண்டுக்கட்டாக அவரை வெளியே தூக்கி வந்து சுராஜை பின்னங்கழுத்து, வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் குத்தினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் சுராஜை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் சுராஜ் மீது காசிமேடு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதன் பின்னணியில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    ஓட்டேரியில் போலீசாரை தாக்கியதாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    ஓட்டேரி பிரிக்ளின் சாலை திடீர் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. நேற்று நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் தட்டிக் கேட்டனர். அவர்களை ரவுடிகள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தலைமை செயலக காலனி போலீஸ்காரர்கள் ஜெயராஜ், மொய்தீன், சுல்தான் உள்பட 8 பேர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அவர்கள் ரவுடி கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் எங்கள் பகுதிக்குள் எப்படி வரலாம்? என்று கூறி போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கினர்.

    சிறிது நேரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ்காரர்களை சுற்றி வளைத்து கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீஸ் ஜீப்பின் கண்ணாடியையும் கல்வீசி நொறுக்கினர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் எங்கிருந்து தாக்குதல் நடக்கிறது என்று தெரியாமல் போலீஸ்காரர்கள் நிலை குலைந்தனர். இதையடுத்து 8 போலீஸ்காரர்களும், ரவுடிகள் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதுபற்றி அவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீஸ் படையினர் தாக்குதல் நடந்த இடத்துக்கு சென்றனர்.

    இதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் தப்பிச் சென்று விட்டனர். பின்னர் சேதமடைந்த ஜீப்பை மீட்டு கொண்டு வந்தனர். காயம் அடைந்த போலீஸ்காரர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போலீசாரை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், பிரபு என்கிற ஜனால், சிவா, பார்த்தீபன், கார்த்திக் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுத்தை சேர்ந்த பால்பாண்டி மகள் சரண்யா (வயது28). இவருக்கும் பொம்மையகவுண்டன் பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (39) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 5 வருடமாக கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த சிலம்பரசன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கருப்பாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கும் சாக்கடை தண்ணீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்வத்தன்று இது குறித்து ஏற்பட்ட தகராறில் லட்சுமி அவரது உறவினர்கள் ராஜேஷ், கஸ்தூரி, ரகு ஆகிய 4 பேரும் சேர்ந்து கருப்பாயி அம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து அவரது பேரன் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரியை கைது செய்தனர்.

    ×