search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bloodshed"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் கூலி வேலை செய்து வந்த மாயக்கண்ணன், யமுனாவை கடந்த 22-ந்தேதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார்.
    • இது குறித்து யமுனாவின் தந்தை மாயக்கண்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகள் யமுனா (வயது 20). இவருக்கும் பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வைரவேல் (27) என்பவருக்கும் கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. இவர்கள் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். வைரவேல் சேலம் மாவட்டம் தலைவாசலில் வெல்டிங் வேலை செய்து வருவதால் வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சென்னையில் கூலி வேலை செய்து வந்த மாயக்கண்ணன், யமுனாவை கடந்த 22-ந்தேதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போனை எடுக்காததால், வைரவேலை தொடர்பு கொண்டு பேசினார். நான் விடுமுறையில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். அங்கு சென்றவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் என்று வைரவேல் கூறியுள்ளார்.

    நேற்று காலை வீட்டிற்கு சென்று வைரவேல் பார்த்த பொழுது, கதவின் உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த வைரவேல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு பார்த்த பொழுது யமுனா ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த வைரவேல், இது குறித்து யமுனாவின் தந்தை மாயக்கண்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் யமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யமுனாவை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒன்னரை வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோக த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம்.
    • ஆத்திரமடைந்த சங்கர் கத்தியை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் அருகே தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45) ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இந்நிலையில் சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம். மேலும் சங்கர் தனது மனைவி பாக்கியலட்சுமி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபடுவாராம்.

    இன்று காலை வழக்கம்போல் சங்கருக்கும் பாக்கிய லட்சுமிக்கும் இடையில் குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது பயங்கரமாக வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி என்றும் கூட பாராமல் பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் பாக்கியலட்சுமி அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பாக்யலட்சுமி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர்போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கணவன் மனைவியை வெட்டிக் கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்று போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர் கிடந்த இடத்தில் ஏராளமான ரத்தம் சிந்தி உள்ளது.அவருக்கு தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், குடிபோதை தகராறில் யாராவது அவரை கத்தியால் குத்தினரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர் மண் எண்ணையை மாணவி மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். தீப்பற்றாததால் அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து மாணவியின் முகத்தில் போட்டு கொடூரமாக கொலை செய்தார்.
    • தன்னை காதலிக்க மறுத்ததால் ரோஜாவை கொலை செய்ததாக சாமிதுரை கூறி உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), விவசாயி. இவரது மகள் ரோஜா (வயது 19).

    ரோஜா நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஆத்தூர் தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் நீலகிருஷ்ணன். இவரது மகன் சாமிதுரை (22), இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    கூடமலையில் உள்ள உறவினர் சின்னதுரை என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சாமிதுரை சென்று வந்தார். அப்போது ரோஜாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜாவிடம் காதலை தெரிவித்தார். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.

    இதனால் சாமிதுரை ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து தனது கூட்டாளிகள் 2 பேருடன் கடந்த 6-ந் தேதி ரோஜா வீட்டிற்கு சென்றார். பின்னர் ரோஜாவிடம் தன்னை காதலிக்குமாறு சாமிதுரை வற்புறுத்தினார்.

    அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சாமிதுரை மண் எண்ணையை ரோஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். தீப்பற்றாததால் அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ரோஜாவின் முகத்தில் போட்டு கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற கெங்கவல்லி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படை அமைத்து சாமிதுரையை தேடி வந்தனர். மேலும் ரோஜாவின் உறவினர்களும், போலீசாருடன் இணைந்து கடந்த 3 நாட்களாக கூடமலை பகுதியில் முகாமிட்டு அவரை தேடினர்.

    இந்த நிலையில் கூடமலை மின் நிலையம் அருகில் சோலை மலையில் சாமிதுரை பதுங்கி இருப்பதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், போலீசார், ரோஜாவின் உறவினர்கள் இன்று காலை அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது சோலைமலையில் இருந்து சாமிதுரை கீழே இறங்கி அங்குள்ள அழகுவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள சோளக்காட்டிற்குள் பதுங்கி இருந்தார். அவரை போலீசாரும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அப்போது ரோஜாவின் உறவினர்கள் சிலர் அவரை தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் சாமிதுரையை கைது செய்து பத்திரமாக அழைத்து சென்றனர். தொடர்ந்து சாமிதுரையை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது தன்னை காதலிக்க மறுத்ததால் ரோஜாவை கொலை செய்ததாக சாமிதுரை கூறி உள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பாக்கெட்டில் மாம்பலத்தில் இருந்து திருத்தணி செல்வதற்கான மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? என்பது தெரிய வில்லை.

    தூக்கில் கிடந்த இடத்தில் இறந்தவரின் கால் தரையில் படும்படி காணப்பட்டது. உடலில் காயங்கள் இல்லை. எனவே மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் துப்புரவு தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது உறவினருடன் நாகல்நகர் பகுதிக்கு வந்தார். பின்பு அவர் தனியாக வீட்டுக்கு திரும்பினார். நாகல்நகர் அரண்மனைக்குளம் அருகே சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆறுமுகம் கொலைக்கு காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மது குடிக்கும் தகராறில் நண்பர்களே ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது. ஆறுமுகத்தின் நண்பர்கள் காளிதாஸ், மாரியப்பன். இவர்களும் ஆறுமுகத்துடன் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுக்கடை பார்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் 3 பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்தனர். அப்போது காளிதாஸ் ஆறுமுகத்திடம் ரூ.20 பணம் கேட்டார். அதற்கு ஆறுமுகம் மறுத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மதுக்கடை பாரில் வைத்து கைகலப்பில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். எனினும் காளிதாசுக்கு ஆத்திரம் தீரவில்லை.

    இந்நிலையில் பாரை விட்டு வெளியே வந்ததும் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காளிதாசும் மாரியப்பனும் வந்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து காளிதாஸ், மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரூ.20 பணம் கேட்டதற்கு ஆறுமுகம் தர மறுத்து தங்களை தாக்கியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நம்பியூர் அருகே அரசு ஆஸ்பத்திரி மருத்தாளுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே மலையப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் ஏதிரே உள்ள ரோட்டில் செல்லப்பன் மற்றும் அவரது 7 வயது குழந்தை காரில் சென்றனர்.

    அப்போது எதிர்பாரத விதமாக கார் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் காயம் அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றனர்.

    அப்போது அங்கு மருந்தாளுனராக பணிபுரிபவர் தீனதயாளன் (வயது 27). மருத்துவர் இல்லை மீட்டிங் சம்மந்தமாக நம்பியூர் சென்று உள்ளார் என கூறினார். நான் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அனுப்பி வைக்கின்றேன் என கூறினார்.

    இதற்கு செல்லப்பன் தீனதயாளனை தாகத வார்த்தையால் பேசினாராம். மேலும் கையால் தாக்கி, கல்லை வீசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

    மேலும் அவர் கல் வீசியதில் மருத்துவமனையில் சுவரில் மாட்டி இருந்த கண்ணாடி உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டல் விடுத்த செல்லப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீனதயாளன் கொடுத்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமங்கலத்தில் மணல் எடுப்பதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பகுதியில் சிலர் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வந்தனர். இதனை ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 49) உள்பட 10 பேர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மணல் எடுத்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் வீட்டிற்குச் சென்று விட்டார்.

    மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்தபோது அலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அம்சு பாண்டி (31), தனுஷ்கோடி மகன் ராஜேஷ் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் மணல் எடுப்பதை ஏன் தடுக்கிறாய்? என கேட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் தாலுகா போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்சு பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தவளக்குப்பத்தில் மதுக்கடை தகராறில் ஏற்பட்ட மீனவர் கொலையில் வாலிபர் சிக்கினார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே தமிழக பகுதியான நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் முத்தாள்ராயன் (வயது 46). மீனவர்.

    நேற்று மாலை இவர் அதே பகுதியை சேர்ந்த தரணி என்பவருடன் தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு மது குடிக்க வந்தனர். அங்கு மது குடித்து விட்டு அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை சரமாரியாக தாக்கினார். இதில் முத்தாள்ராயன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விரைந்து வந்து முத்தாள்ராயனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்தாள்ராயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து தவளக்குப்பம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து முத்தாள்ராயனை கல்லால் அடித்து கொன்ற வாலிபரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த முத்தாள்ராயனின் உறவினர்கள் மற்றும் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சம்பவம் நடந்த மதுகடைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொலையாளியை கைது செய்ய கோரி புதுவை- கடலூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். கொலையாளியை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.

    இதனை ஏற்று முத்தாள்ராயனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் முத்தாள்ராயனை கல்லால் அடித்து கொன்றது அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் மணி என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்தாள்ராயனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மணி பரபரப்பு தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:-

    மதுக்கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் எனது உறவினர் ஆவார். அந்த கடையில் முத்தாள்ராயன் தின்பண்டம் வாங்கி விட்டு 2 ரூபாய் கடன் வைத்திருந்தார்.

    நேற்று மாலை முத்தாள்ராயனிடம் எனது உறவினர் அந்த பணத்தை கேட்டபோது முத்தாள்ராயனும், அவருடன் வந்த தரணியும் எனது உறவினரிடம் தகராறு செய்தனர்.

    இதனை நான் தட்டிக்கேட்டபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். நான் அவர்களிடம் இருந்து பயந்து ஓடிய போது என்னை விரட்டி விட்டு கல்லால் தாக்கினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை திருப்பி தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் முத்தாள்ராயன் மயங்கி சாய்ந்ததும் நான் தப்பி ஒடிவிட்டேன். ஆனால், கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கவில்லை.

    இவ்வாறு மணி போலீசாரிடம் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடியாத்தம் அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் - காட்பாடி ரோடு ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் உதயசூரியன் (வயது 25), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    உதயசூரியன் 2 ஆண்டுகளுக்கு முன்புஉஷா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று மாலையில் உதயசூரியனும், அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவரும் குடியாத்தம் காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தி உள்ளனர். அப்போது செதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த பெயிண்டர் ராஜா மதுகுடிக்க வந்தார். குடிபோதையில் இருந்த உதயசூரியன் நண்பர் மகேந்திரனுக்கும், ராஜாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது மகேந்திரனுக்கு ஆதரவாக சென்று ராஜாவை உதயசூரியன் தாக்கினார். இதனையடுத்து ராஜா தனது உறவினரான பெயிண்டர் ரமேசை போன் செய்து அழைத்தார்.

    இந்த நிலையில் சுமனும், உதயசூரியனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சக்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

    பின்னர் திடீரென ராஜா, ரமேஷ் ஆகியோர் உதயசூரியனை கத்தியால் கழுத்து, தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ரமேஷ் மற்றும் இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்ததாக உதயசூரினின் நண்பர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.