என் மலர்
நீங்கள் தேடியது "unconscious"
- வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்று போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர் கிடந்த இடத்தில் ஏராளமான ரத்தம் சிந்தி உள்ளது.அவருக்கு தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், குடிபோதை தகராறில் யாராவது அவரை கத்தியால் குத்தினரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடகா மாநில எல்லையில் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 28).
இவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் சங்கரப்பா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வீட்டில் தாளவாடிக்கு போய் விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அவர் கும்டாபுரம் அருகே ரோட்டோரம் உள்ள கும்பேஸ்வரா கோவில் அருகே சங்கரப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அருகே அவர் கொண்டு வந்த பை ஒன்று கிடந்தது. அதில் ஒரு டைரி, ஒரு சாக்லெட் இருந்தது. உடலில் எந்த வித காயமும் இல்லை.
அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தினால் தெரியவரும்.






