ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த வாலிபர் -பரபரப்பு

வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் பஸ் நிலையத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம் சென்று போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர் கிடந்த இடத்தில் ஏராளமான ரத்தம் சிந்தி உள்ளது.அவருக்கு தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், குடிபோதை தகராறில் யாராவது அவரை கத்தியால் குத்தினரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com