search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man death"

    • முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் (18), முத்தரசன் (20) ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
    • நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அரி செல்வம் மகன் மகாராஜன் (18), தியாகராஜர் தெருவை சேர்ந்த சேகர் மகன் முத்தரசன் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

    பைக் ரேஸ்

    நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரின்ஸ் மோட்டார் சைக்கிளில் பின்னால் மகாராஜன் அமர்ந்துள்ளார். அவர்கள் சேரன்மகா தேவி விலக்கு பகுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து முக்கூடலை நோக்கி மீண்டும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் பொட்டல் காலனி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே மருந்து விற்பனை பிரதிநிதிகளான களக்காடு சிங்கம்பத்து பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (42), டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (42) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    வாலிபர் பலி

    அப்போது அவர்கள் மீது பிரின்ஸ் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த முத்தரசன் மோட்டார் சைக்கிளும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மகாராஜன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதக்கத்துல்லா, பொன்ராஜ், பிரின்ஸ், முத்தரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார்மோதி படுகாயமடைந்தார்.
    • தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுதாகர் மகன் ஸ்ரீராம்(15). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பைபாஸ் சாலை வீரப்பஅய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார்மோதி படுகாயமடைந்தார்.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிவார்டு நர்சாரியிடம் விசாரித்து வருகின்றனர்.

    • குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்துள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலசொக்கநாதபுரம்:

    கோம்பை அருகே கரியணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(21). இவர் சம்பவத்தன்று பண்ணைப்புரம் கரியணம்பட்டி கட்டிடம் அருகே உள்ள குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததால் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
    • டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குமரபட்டிபுதூரை சேர்ந்தவர் வேல்தியாகு (வயது 36). டிராக்டர் டிரைவர்.இவர் பாதசிறுகுடியில் இருந்து குமரபட்டிக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த விக்னேஷ் என்பவர் சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்தவரின் பிரதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ்- இன்ஸ்பெக்டர் தங்கமுனிசாமி வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் வேல் தியாகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன விக்னேஷ்க்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர்.

    • காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பாகாநத்தம் அருகில் உள்ள தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்க்கும் பொழுது பூமிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் பழனிச்சாமி குடும்பத்தினர் அவரை குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளாததால் பொள்ளாச்சியில் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊரான தோப்பூருக்கு தினேஷ்குமார் வந்தார். பின்னர் தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் உள்ள இரும்பு கம்பியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தினேஷ் குமாரின் தந்தை பழனிச்சாமி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா ஆலோசனைப்படி சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் அருகே கள்ளக்காதலிக்காக தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • கள்ளக்காதலிக்காக உயிர் விட்ட வாலிபர்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை வாடிப்பட்டி காலனியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கணவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த சந்துரு (23) என்பவருக்கும் கள்ள த்தொடர்பு ஏற்பட்டது. புவனேஸ்வரிக்கு, சந்துரு பணம் கொடுத்துள்ளார். இதனிைடயே திடீரென சந்துருவுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு கடந்த 13-ந் தேதி இரவு புவனேஸ்வரி வீட்டுக்கு வந்தார். அவருடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி அவரையும் அணைத்துக் கொண்டார்.

    இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்துரு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தாளவாடி அருகே கும்பேஸ்வரா கோவில் அருகே மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடகா மாநில எல்லையில் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 28).

    இவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் சங்கரப்பா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வீட்டில் தாளவாடிக்கு போய் விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் அவர் கும்டாபுரம் அருகே ரோட்டோரம் உள்ள கும்பேஸ்வரா கோவில் அருகே சங்கரப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அருகே அவர் கொண்டு வந்த பை ஒன்று கிடந்தது. அதில் ஒரு டைரி, ஒரு சாக்லெட் இருந்தது. உடலில் எந்த வித காயமும் இல்லை.

    அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தினால் தெரியவரும்.

    எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் மதன்குமார் (வயது 24). இவர் கோவை சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் உள்ள இரும்பு ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு மதன்குமார் வேலை செய்து கொண்டு இருந்த போது எந்திரத்துக்குள் இடது கை சிக்கி துண்டானது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த சகஊழியர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மதன்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மதன்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இறந்தவரின் இரு கைகளை புதுவை வாலிபருக்கு பொருத்தி ஜிப்மர் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் தொழிற்சாலை ஒன்றில் நடந்த விபத்தில் 31 வயது வாலிபர் ஒருவர் இரு கைகளையும் இழந்தார்.

    அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாற்று கை பொருத்துவதற்கு டாக்டர்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பெங்களூரில் 22 வயது பீகார் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    அவருடைய நிலைமை மோசமானதை அடுத்து 16-ந் தேதி நாராயணா ஹெல்த் சிட்டி என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மூளைசாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வாலிபருக்கு பெங்களூர் விபத்தில் இறந்த வாலிபரிடம் இருந்து இரு கைகளையும் தானம் பெற முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு சம்மதம் கிடைத்தது.

    அதை தொடர்ந்து பெங்களூர் வாலிபரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு ரசாயனங்கள் கலந்து ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டது.

    ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடனே ஏற்றி புதுவைக்கு கொண்டு வந்தனர். நேற்று பகல் 12.15 மணிக்கு பெங்களூரில் இருந்து அந்த வாகனம் புறப்பட்டது.

    புதுவைக்கும், பெங்களூருக்கும் இடைப்பட்ட தூரம் 300 கி.மீட்டர். இந்த தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து 4.15 மணிக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வாகனம் வந்து சேர்ந்தது.

    இங்கு அந்த கைகளை பொருத்தி ஆபரேசன் செய்வதற்காக 7 டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    கைகள் வந்ததும் அவர்கள் புதுவை வாலிபருக்கு அவற்றை பொருத்தினார்கள். நீண்ட நேரம் ஆபரேசன் செய்து கை பொருத்தப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    பெங்களூர் வாலிபரின் இதயம், இதய வால்வுகள், சிறுநீரகம், ஈரல், கண்கள் ஆகியவையும் தானமாக கொடுக்கப்பட்டன.

    அதில் இதயத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு பொருத்தினார்கள். ஈரல் பெங்களூரை சேர்ந்த 67 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. அவரது ஈரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருந்தது.

    சிறுநீரகம் மைசூரில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

    பெங்களூர் வாலிபர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை காவலாளியாகவும், தாயார் கூலித்தொழிலாளியாகவும் இருந்து வந்தனர்.

    இந்த குடும்பத்தில் அடுத்தடுத்து சோகங்கள் நடந்தன. ஏற்கனவே வாலிபரின் உடன் பிறந்தோர் 3 பேர் இறந்து விட்டனர். கடைசியாக இருந்த இவரும் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுவையில் கைகள் பொருத்தப்பட்ட அந்த நபரின் விவரங்களை இதுவரை ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிடவில்லை. #tamilnews
    சூலூர் அருகே நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து தள்ளி கொலையா? செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர்:

    தர்மபுரியை சேர்ந்தவர் அன்பரசு (27). இவர் கோவை புதூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் பாலா, ஜீவா ஆகியோர் சூலூர் பஸ் நிலையம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கருமத்தம் பட்டியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களுடன் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் அதே காம்பவுண்டில் தங்கி உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் பார்ட்டி வைத்தனர். இதற்காக அன்பரசுவையும் அழைத்து இருந்தனர். அவரும் சென்று இருந்தார். நேற்று இரவு அவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

    திடீரென வாலிபர் அன்பரசு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அன்பரசு உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அன்பரசு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை நண்பர்கள் யாராவது மாடியில் இருந்து தள்ளி விட்டு கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் காவலில் வாலிபர் மரணமடைந்த வழக்கில் 2 போலீஸ்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை அடுத்து கேரள முதல்வரை சந்ததித்து வாலிபரின் தாய் கண்ணீர் மல்க நன்றி கூறினார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற வாலிபரை கடந்த 2005-ம் ஆண்டு திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓணம் பண்டிகையை யொட்டி ரூ.4 ஆயிரத்துடன் புது துணி எடுக்கச் சென்ற உதயகுமாரை திருடன் என்று சந்தேகத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோதுதான் இந்த கொடூரம் நடந்தது.

    தனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றுவிட்டதாக உதயகுமாரின் தாய் பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றிய ஜிதக்குமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிதாஸ், ஷாபு மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை கேட்க கோர்ட்டுக்கு வந்திருந்த பிரபாவதி தீர்ப்பை தொடர்ந்து வானத்தை நோக்கி கைகூப்பி வணங்கி கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.



    இந்த நிலையில் பிரபாவதியும், அவரது இன்னொரு மகன் மோகனன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகத்திற்கு சென்று முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்தார். கூப்பிய கரங்களுடன் கண்ணீர் சிந்தியபடி தன்னை நோக்கி பிரபாவதி வருவதை பார்த்ததும் பினராய் விஜயன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரபாவதியின் கைகளை பிடித்தபடி அவருக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த வழக்கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுத்ததற்காக அவருக்கு நன்றி கூறினார். தனது மகன் உதயகுமார் கொலையுண்டபோது பினராய் விஜயன் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்ததையும், அப்போது அவர் தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையும் பிரபாவதி அவரிடம் நினைவுபடுத்தினார்.



    மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், இதில் தனக்கு அரசின் உதவி தேவை என்றும் பிரபாவதி கேட்டுக்கொண்டார். சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் மாநில அரசு கண்டிப்பாக செய்யும் என்று பினராய் விஜயன் அவரிடம் உறுதியளித்தார். #PinarayiVijayan
    அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்தவர் சோலையன். இவரது மகன் பார்த்தசாரதி (வயது27). இவர் மலேசியாவில் இருந்து விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு காலாடிப்பட்டி சத்திரத்திற்கு பார்த்தசாரதி சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே செங்கப்பட்டி பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பார்த்தசாரதி படுகாயமடைந்தார்.

    இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×