என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மருத்துவனை கழிவறையில் அமுக்கி குழந்தை கொலை - கல்நெஞ்சம் கொண்ட தாய்க்கு வலைவீச்சு
    X

    மருத்துவனை கழிவறையில் அமுக்கி குழந்தை கொலை - கல்நெஞ்சம் கொண்ட தாய்க்கு வலைவீச்சு

    • குழந்தை கழிவறை கோப்பையில் அமுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.
    • போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பிரசவ வார்டு பின்புறம் கழிவறை உள்ளது.

    இந்த கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அமுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.

    இதனை கழிவறைக்கு சென்ற ஒருவர் பார்த்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விக்கிரவாண்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் குழந்தையை கழிவறை கோப்பைக்குள் அழுத்தி கொலை செய்த கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்றாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறை கோப்கைக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×