search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naveen Patnaik"

    ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

    பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  

    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



    இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஒடிசா கவர்னர் கணேஷி லால்-ஐ சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கையொப்பத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பிஜு ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் முன்னர் தெரிவித்திருப்பதைப்போல் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக வரும் 29-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்பார் என தெரிகிறது.  
    ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.



    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், ஆந்திர முதல் மந்திரியாக பொறுப்பேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நவீன் பட்நாயக்குக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    “ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக்குக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நவீன் பட்நாயக்கின் அரசியல் தலைமை பண்புகள் மற்றும் அனுபவத்தால் ஒடிசா மாநிலம் மிகுந்த செழிப்படையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

    ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான செயல்திறன் அளித்த என்னுடைய நண்பரும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டுகிறேன். முதல்-மந்திரியாக பொறுப்பு வகிக்கும் வெற்றிகரமான காலத்தில் ஆந்திர மாநிலத்தை தென் இந்தியாவில் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ஒடிசா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களை பிடித்த பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை மோடி வாழ்த்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆந்திராவில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் வேட்பாளர்களும் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களும் அதிக இடங்களில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலங்களில் விரைவில் ஆட்சி அமைக்கவுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தனது டுவிட்டர் பக்கத்தில் தெலுங்கு மற்றும் ஒடியா மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து செய்தியை அவர் பதிவிட்டுள்ளார்.
    ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

    147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) ஆகியவையும் களத்தில் நின்றன. ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இதனால் பிஜுஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை.

    பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது.

    நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி ஆக உள்ளார். அவர் 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்து ஒடிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் 117 தொகுதிகளை வென்று இருந்தது.
    ஏழை பெண்கள் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம், ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #NaveenPatnaik #healthinsurance #marriageassistance #LSpolls
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபைக்கான தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 29 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    இம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளத்திடம் இருந்து ஆட்சியை பறிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விரு கட்சிகளும் நேற்று ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு, ஏழை பெண்கள் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி, பள்ளிகளில் மழலையர் வகுப்பில் இருந்து இறுதியாண்டு வரையிலும், மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்புகள் வரையிலும் கல்லூரிகளில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

    மேலும், பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வசதி, 500 கோடி ரூபாய் நிதிதொகுப்புடன் நெல் கொள்முதல் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான சீருடை தயாரிப்பில் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை என பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் நவீன் பட்நாயக் இன்று அளித்துள்ளார். #NaveenPatnaik #healthinsurance #marriageassistance #LSpolls
    ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெறும் என ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #BJD
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையையும் வீழ்த்தி பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறையும் அந்த கட்சி தனித்து களம் இறங்குகிறது. தேர்தல் பிரசாரத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் பேசுகையில், ஒடிசாவில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார்.

    மேலும், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த பா.ஜனதா, அதிகாரத்துக்கு வந்ததும் அதை புறக்கணித்து விட்டதாக நவீன் பட்நாயக் குற்றம் சாட்டினார். 
    சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். #ChandrashekharRao
    ஐதராபாத்:

    இந்தியாவில் உள்ள முதல்-மந்திரிகளில் சிறப்பாக செயல்படுபவர் யார் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

    அந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திர சேகரராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயல்படுவதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 68.3 சதவீத மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

    இமாச்சலபிரதேச முதல்- மந்திரி ஜெய்ராம் தாகூர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 3-வது இடத்துக்கு வந்துள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்தில் உள்ளார்.



    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த முறை நடந்த கருத்து கணிப்பில் முதன்மை இடங்களில் இருந்தார். இந்த தடவை அவர் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்-மந்திரி ராவத்துக்கு அவர்களது மாநிலங்களில் எதிர்பார்த்த ஆதரவு இல்லை. #ChandrashekharRao
    ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். #NaveenPatnaik #Odishaassemblypolls
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NaveenPatnaik #Odishaassemblypolls
    ஒடிசாவில் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabha
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha 
    பாராளுமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் 33 சதவீதம் தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabhaticket
    புவனேஸ்வர்:

    பீகார் மாநில அரசு மகளிர் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில், கேந்திரபாரா நகரில் இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு விழாவில் பங்கேற்று பேசிய ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், 'பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் 33 சதவீதம்  தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்’ என அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabhaticket
    மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik
    புவனேசுவரம்:

    மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று கீதா மேதா அறிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவர், இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், “பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் என கருதி மத்திய அரசு என்னை தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இதனால் எனக்கும், அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், விருதை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik

    ×