search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரி"

    • குழந்தை அனந்துவை அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
    • தகவலறிந்த குழந்தையின் தாய் சிந்து மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொன்னியூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீகண்டன்-சிந்து. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை அனந்து (வயது 1½).

    சம்பவத்தன்று சிந்து தனது வீட்டுக்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரது குழந்தை அனந்து வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையை, சிந்துவின் சகோதரியான பிந்து வீட்டுக்குள் இருந்து வெளியே தூக்கிச் சென்றிருக்கிறார்.

    பின்பு குழந்தை அனந்துவை அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். குழந்தையை கிணற்றில் வீசியது குறித்து அந்த பகுதியில் இருந்த தொழிலாளர்களிடம் பிந்து தெரிவித்திருக்கிறார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கிணற்றுக்குள் பார்ததனர். அப்போது கிணற்றுக்குள் குழந்தை அனந்து பிணமாக கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த குழந்தையின் தாய் சிந்து மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    குழந்தையின் பிணத்தை பார்த்து தாய் சிந்து கதறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். குழந்தையை கிணற்றில வீசி கொன்ற பிந்துவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக குழந்தையை கொன்றார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிந்து மனநலம் பாதித்தவர் என்ப தும், மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. 1½ வயது குழந்தையை தாயின் சகோதரியே கிணற்றில வீசி கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • முன்தினம் மெட்டில்டா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே பெத்தேல் புரம் வண்டா விளையை சேர்ந்தவர் ஜோஸ் மெர்சலின் மெட் டில்டா (வயது 57). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேல் கணவர் ஜாண் கென்னடியை பிரிந்து அதே ஊரில் சகோதரர் ஆன்றனி வெனான்சியஸ் சைமன் (54) வீட்டருகில் வசித்து வருகிறார்.

    சகோதரரின் சொத்து சம்பந்தமாக ஆன்றனி வெனான்சியஸ் சைமன் சகோதரியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சகோதரி-தம்பியிடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மெட்டில்டா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சைமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெட்டில்டாவின் இடது கை மணிக்கட்டில் வெட்டி மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்ந மெட் டில்டா குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் சைமன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • செய்யது அலி பாத்திமாவின் தம்பி கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி இறந்து போனார்.
    • தனது தம்பி இறந்த துக்கம் தாளாமல் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    கன்னியாகுமரி : 

    திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் முகமதுகாஜா (வயது 42). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (32). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். முகமதுகாஜா சமீபத்தில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இதனிடையே திருச்சியில் இருந்த செய்யது அலி பாத்திமாவின் தம்பி கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி இறந்து போனார். அவரது உடலை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் திங்கள்சந்தை பறையன்விளைக்கு கொண்டு வந்தனர். அதே ஆம்புலன்சில் முகமதுகாஜா அவரது மனைவி செய்யது அலி பாத்திமா மற்றும் பிள்ளைகளும் வந்தனர். செய்யது அலி பாத்திமா தனது தம்பி இறந்த துக்கம் தாளாமல் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று சகோதரர் இறந்த துக்கத்தில் இருந்த செய்யது அலி பாத்திமா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்யது அலி பாத்திமா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து முகமது காஜா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போன ஜென்மத்தில் சகோதரிகளாக இருந்தோம் எனக்கூறி இளம்பெண்ணை கடத்த முயன்ற பெண் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளை மத்தியப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
    போபால்:

    மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவானி என்ற பெண், தனது தாய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையில் சில வாரங்கள் இருந்துள்ளார். அப்போது, 40 வயதான கிரண் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு மலரவே போன் நம்பர்களை பறிமாற்றம் செய்து பேசும் அளவுக்கு இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் வந்த கிரண் போன ஜென்மத்தில் நாம் இருவரும் சகோதரியாக இருந்தோம் எனக்கூறி ஷிவானியை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனை அடுத்து, ஷிவானி குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் கிரண் மற்றும் அவருடன் வந்த பைகுலா போலீஸ் நிலைய காவலர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×