இரணியலில் தம்பி இறந்த அதிர்ச்சியில் சகோதரி சாவு

செய்யது அலி பாத்திமாவின் தம்பி கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி இறந்து போனார்.தனது தம்பி இறந்த துக்கம் தாளாமல் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இரணியலில் தம்பி இறந்த அதிர்ச்சியில் சகோதரி சாவு
Published on

கன்னியாகுமரி : 

திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் முகமதுகாஜா (வயது 42). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (32). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். முகமதுகாஜா சமீபத்தில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே திருச்சியில் இருந்த செய்யது அலி பாத்திமாவின் தம்பி கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 31ம் தேதி இறந்து போனார். அவரது உடலை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் திங்கள்சந்தை பறையன்விளைக்கு கொண்டு வந்தனர். அதே ஆம்புலன்சில் முகமதுகாஜா அவரது மனைவி செய்யது அலி பாத்திமா மற்றும் பிள்ளைகளும் வந்தனர். செய்யது அலி பாத்திமா தனது தம்பி இறந்த துக்கம் தாளாமல் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சகோதரர் இறந்த துக்கத்தில் இருந்த செய்யது அலி பாத்திமா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்யது அலி பாத்திமா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து முகமது காஜா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com