search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha Assembly election"

    ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

    பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  

    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



    இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஒடிசா கவர்னர் கணேஷி லால்-ஐ சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கையொப்பத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பிஜு ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் முன்னர் தெரிவித்திருப்பதைப்போல் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக வரும் 29-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்பார் என தெரிகிறது.  
    ×