search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monsoon"

    • பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருகி வாடுகிறது.
    • விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை ஊராட்சியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவ சாயம் நடந்து வருகிறது.

    இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பருவ மழையை நம்பி பெரியகாரை பகுதி விவசாயிகள் ஏக்க ருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் களை பயிரிட்டனர்.

    ஆனால் காலம் கடந்த பின்பும் பருவ மழை கைகொடுக்கவில்லை. இதனால் வயல்கள் வறண்டு விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் போதிய தண்ணீர் பாய்ச்சாததால் நெற்பயிர் கள் கருகி வாடும் நிலையில் உள்ளன. கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினா லும் போதவில்லை. இதனால் பயிர்கள் கருகி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தேவகோட்டை வட்டத்தில் ஒரு சில நபர்களை தவிர பெரும்பாலான விவசாயிக ளுக்கு பயிர் காப்பீட்டு நிவா ரணம் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ள னர். மாவட்ட கலெக்டர் இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டை செய்யலாம் என அறிவித்துள்ள நிலையி லும் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பு பணிகளை இதுவரை அதி காரிகள் மேற்கொள்ள வில்லை.

    எனவே வாடும் பயிர்க ளின் நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.

    கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால்கள் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுகா சாலியமங்களத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பொதுமக்கள் கடைபி டிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விவேகானந்தா சமூக கல்வி மையப் பொறுப்பாளர் சுசீலா தலைமை வகித்தார். சுய உதவி குழு பொறுப்பா ளர்கள் அனிதா, சண்முக ப்பிரியா ஆகியோர் முன்னிலை வைத்தனர்

    இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைகாலங்களில் பொதும க்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வது குறித்தும் மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் மழைகாலங்களில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் கவுரி, ராமலெட்சுமி, பரமேஸ்வரி, சண்முகப்பி ரியா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
    • கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை யொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஜே.சி.பி வாகனங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கடலூர் வண்டிப் பாளையம், முது நகர், பச்சையாங்குப்பம், நத்தவெளி சாலை, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணியை மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.
    • மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும்.

    இறங்கி வரும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும், பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும், கால்நடைகள் நீர் பருகுவதற்கு வாய்ப்பாக அமைவதும், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் வருமானத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும். பருவ மழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை தனது சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான்.

    இறுதிப்பாசனத்திற்கும், அதன் இடையே தேவைப்படும் உயிர் பாசனத்திற்கும், வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழிவையே கொண்டது. தமிழகத்துக்கு 32 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடைகாலத்திலும் மழை பொழிவு கிடைக்கிறது.

    இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும். பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்கலாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம், வயல்களில் மொத்த வடிகால்களையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்புக்கு 8-க்கு 5 மீட்டர் அல்லது 10-க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். மானாவாரியில் 40-க்கு 40 மீட்டர் நீள அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. ஆழம் 2 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழிவெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும்பகுதியை வயலில் வரப்பினை பலப்படுத்தவும், குழிப்பகுதியை சுற்றி அணைக்கவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளளவு 40 கனமீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது மனித சக்தி மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், பருத்தி, பயறு வகை, சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெற முடியும். பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம். அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும். குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணைக் குட்டைகளில் நீர் தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இது போல், மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும் போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுற்றுப்புறத்தில் குளிர்ந்த காற்று வீசும்.

    உபரிநீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன் வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், பண்ணைக்காடுகள் வளர்க்கவும், நாற்றுகள் பராமரிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் இந்த நீரை பயன்படுத்தலாம்.

    • வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை கால கட்டத்தில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாளை தீயணைப்புத்துறை சார்பில் பாளையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    பேரிடர் மீட்பு

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் பேரிடர் மீட்பு குறித்து விளக்க உரையாற்றினார்.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். தீய ணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பிளாஸ்டிக், தேங்காய் மட்டை, கியாஸ் சிலிண்டர், தண்ணீர் கேன்கள், தெர்மாகோல் உள்ளிட்டவை மூலமாக வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை ஒத்திகையாகவும் தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ஒத்திகை

    வெள்ளத்தில் சிக்கி கொண்ட கர்ப்பிணிகள், முதியோர்களை பாது காப்பாக மீட்பது எப்படி?, தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருவதற்கு முன்பாக என்னென்ன சாதனங்களை பயன்படுத்தி வெள்ளத்தில் இருந்து மீண்டு வரலாம் என்பது போன்ற மீட்பு ஒத்திகையை மாணவிகளுக்கு தீயணைப்பு துறை அலுவலர்கள் செய்து காண்பித்தனர்.

    அதேபோன்று விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் திடீர் உடல்நல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்தும் செயல்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துக்கூறினர். இதுதவிர தீயணைப்பு மீட்பு துறை சார்பில் அவசர கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் நவீன சாதனங்கள் குறித்தும் எடுத்து கூறினர்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    • நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
    • பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சிறப்பாகத் திட்டமிட்டு, இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழைக் காலத்தை அதேபோன்ற முறையை கையாளவேண்டும்.

    கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக 4399 ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3770 ஆக குறைந்துள்ளன.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

    வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். பள்ளிகளில் மாணவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருத்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள், கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை பல்துறை மண்டல குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. அமைச்சர் பெரு மக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்யதிட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன்.

    இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்பதை கண்டிப்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உட னுக்குடன் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவ மழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் ரத்தோர், தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் இன்று நெல்லை வந்துள்ளனர்.
    • இந்த குழு 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    நெல்லை:

    அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் இன்று நெல்லை வந்துள்ளனர்.

    கமாண்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையில் சுமார் 16 பேர் அடங்கிய அந்த குழு இன்று காலை நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகைக்கு வந்தடைந்தது. இந்த குழு 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    அணைக்கட்டுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அடங்கிய பகுதிகளில் கூடுதல் ஆய்வு மேற்கொள்கின்றனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.

    அதே நேரத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் குழுவினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபத்தான காலகட்டங்களில் முதலுதவி சிகிச்சை முறைகள் அளிப்பது குறித்த பயிற்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த குழுவினர் நடத்த உள்ளனர்.

    • பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
    • பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

    1. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    3. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.

    4. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.

    5. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

    6. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    7. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

    8. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    9. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    10. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    12. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    13. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    14. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    15. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றப்படவேண்டும்.

    16. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    17. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    18. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

    19. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள

    சுகாதார நிலையங்களுக்கு சென்று அறிவுறுத்தவேண்டும்.

    20. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.

    21. பள்ளிகளில் இடிக்கக்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு இடித்திடல் அவசியம். இல்லையெனில் அக்கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    22. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

    23. மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.

    24. கடலோர பகுதிகள் கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

    • கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    பொன்னேரி:

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அதிகாரிகள், கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டிடம் பழுதடைந்து, மின்விசிறி இயங்காமலும் டியூப்லைட் எரியாமலும் தண்ணீர் வசதி இன்றி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இரு்நததால் சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
    • 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வழக்கமாக பெய்யும். இக்காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான அளவு மழை பொழிவு இருக்கும்.

    பருவ மழை காலம் நெருங்கி வருவதால் கால்வாய்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நீர் வழிகளில் தடையின்றி வெள்ள நீரை கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக நீர் வளத்துறை கிட்டத்தட்ட 30 சதவீத பணிகளை முடித்து உள்ளது. 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரூர், செங்குன்றம், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நீர்வாழ்களை களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. 184.45 கி.மீ. தொலைவுக்கு செல்லும் கால்வாய்களில் 77 பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடையாறு ஆற்று முகத் துவாரம் மற்றும் முட்டுக் காடு, புதுப்பட்டினம் கடல் முகத்துவாரங்களில் குவிந்துள்ள மணல் அகற்றப்படுகிறது. கண்டலேறு-பூண்டி வாய்க்கால் முற்றத்தின் அரிக்கப்பட்ட கரைகளை மூடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு செல்கிறது.

    பருவமழையை கருத்தில் கொண்டு நீர் வழிகளில் உள்ள செடிகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை 137 எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் உள்ள குப்பைகளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அதிகாரிகள் அகற்ற வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூவம் பகுதிகளிலும், குறுகிய பகுதிகளிலும் துப்புரவு பணியை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

    விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா பகுதியில் சென்னை மாநகராட்சி உதவியுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 லாரிகளில் காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கண்காணிக்க என்ஜினியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட செடிகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

    அகற்றப்பட்ட செடிகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் அதேவேளையில் அழிக்கப்பட்ட தாவரங்களை உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ×