search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm pond"

    • வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.
    • மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும்.

    இறங்கி வரும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும், பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும், கால்நடைகள் நீர் பருகுவதற்கு வாய்ப்பாக அமைவதும், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் வருமானத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும். பருவ மழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை தனது சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான்.

    இறுதிப்பாசனத்திற்கும், அதன் இடையே தேவைப்படும் உயிர் பாசனத்திற்கும், வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழிவையே கொண்டது. தமிழகத்துக்கு 32 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடைகாலத்திலும் மழை பொழிவு கிடைக்கிறது.

    இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும். பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்கலாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம், வயல்களில் மொத்த வடிகால்களையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்புக்கு 8-க்கு 5 மீட்டர் அல்லது 10-க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். மானாவாரியில் 40-க்கு 40 மீட்டர் நீள அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. ஆழம் 2 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழிவெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும்பகுதியை வயலில் வரப்பினை பலப்படுத்தவும், குழிப்பகுதியை சுற்றி அணைக்கவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளளவு 40 கனமீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது மனித சக்தி மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், பருத்தி, பயறு வகை, சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெற முடியும். பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம். அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும். குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணைக் குட்டைகளில் நீர் தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இது போல், மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும் போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுற்றுப்புறத்தில் குளிர்ந்த காற்று வீசும்.

    உபரிநீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன் வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், பண்ணைக்காடுகள் வளர்க்கவும், நாற்றுகள் பராமரிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் இந்த நீரை பயன்படுத்தலாம்.

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக பண்ணை குட்டை அமைந்துள்ளது.
    • புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழி வையே கொண்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி. கருவேல மரங்கள் நிறைந்த பகுதி. வானம் பார்த்த பூமி என்ற அடைமொழிகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் விவசாய நிலங்களில் பண்ணை குட்டை வெட்டுவதால் மழை காலங்களில் பெய்த மழைநீரை தேக்கி வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் விவசாயத்திற்க்கு விவசாயிகள் பயன்படுத்துவதால் ராமநாதபும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் மண் அரிப்பை தடுக்கவும் பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும் கால்நடைகள் நீர் குடிக்கவும் பழக்கன்றுகள் மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயகள் தங்களின் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் வருடம் முழுவதும். தண்ணீர் பெறமுடியும் பருவமழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிகளுக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை விவசாயிகளின் சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான் வறட்சி காலங்களில் பயிர்க ளுக்கு தேவையான தண்ணீரை கொடுப்பது பண்ணை குட்டை கள் தான்.

    மழைகாலங்களில் பெய்யும் மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் தேவையான தண்ணீரை பெறமுடியும்.

    இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழி வையே கொண்டது. தமிழ கத்துக்கு சுமார் 40 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், சுமார் 56 சதவீதம் வடகிழக்கு பருவமழை காலத்திலும், 8 சதவீதம் குளிர்காலத்திலும், 19 சதவீதம் கோடை காலத்திலும் மழை பெய்கிறது. இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தேக்க முடியும்.

    பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்க லாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம் வயல்களில் மொத்த வடி கால்களையும் ஒருங்கி ணைப்பதாக இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பள வுக்கு குறையாமல் பண்ணை குட்டைகளை வெட்ட வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழி வெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயலில் வரப்பினை பலப் படுத்தவும் குழிப் பகுதியை சுற்றி அணைக்கவும் பயன் படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளவு 40 கன மீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது இறவை மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு சோளம் பருத்தி பயறு வகை சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெறமுடியும்.

    பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம் அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும் குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணை குட்டைகளில் நீர்தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுபோல் மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும்போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். உபரி நீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன்வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், நாற்றுக்கள் பராமரிக்கவும் கால்நடைகளை பராமரிக்கவும் பண்ணை குட்டை நீரை பயன் படுத்தலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்
    • 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடக்கிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் இ.சுதா இளங்கோ அவர்களிடம் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் பணிகளை நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டுமான பணியை பார்வையிட்டார். மேலும் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை அமைச்சர் ஏவா வேலு கடந்த 9-ந்தேதி 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும் புள்ளானேரி ஊராட்சிக்குட்பட்ட தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். மேலும் பள்ளி மாணவர்கள் திருக்குறள் மற்றும் வகுப்பின் சுவரில் அமைந்திருந்த சிறு பலகையில் உள்ள தமிழ் சொற்களை படிக்க வைத்தார்.

    ஆய்வுகளின்போது உதவி இயக்குநர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தணிகாசலம், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    • தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடந்தது
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அமைந்துள்ள நிலாவூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் வட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தனிநபர் பண்ணை குட்டை அமைக்க திட்டமிடப்பட்டது.

    வெட்டும் பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கதவநாச்சியம்மன் கோவிலில் புதியதாக உருவாக்கப்பட்ட தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தேவராஜ் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால், பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி செந்தில்குமார், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற கவுன்சிலர் தனலட்சுமி, சங்கர், காளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜோலார்பேட்டை மண்டலவாடி ஊராட்சியில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட மூர்த்தியூர் பகுதியில் புதியதாக பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் கலந்து கொண்டு பண்ணை குட்டை அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தார்.

    மேலும் இந்த பண்ணை குட்டையானது 15 அடி நீளம், 15 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட பண்ணை குட்டையில் மீன் பண்ணை அமைத்து வாழ்வாதாரம் பெற முடியும்.

    இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    மேலும் மண்டல வாடி ஊராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் அமைக்கப்ப ட்டுள்ள பேவர் பிளாக் சாலையை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சின்னத்தம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×