search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainwater harvesting"

    • விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன், குடிநீர் வழங்கல் துறை நிர்வாக பொறியாளர் ராமலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "பருகுவோம், பருகுவோம் தூய்மையான நீரை பருகுவோம், காப்போம் காப்போம் குடிநீரின் தரத்தை காப்போம், தேக்குவீர் மழைநீர் பாதுகாப்பீர் குடிநீர், முயல்வோம் முயல்வோம் நீரின் தரம் உயார்ந்த முயல்வோம், அறிவோம், ஆய்வோம் குடிநீரின் தரத்தை அறிவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம், தூய சவேரியார் கல்லூரி வழியாக தூய யோவான் பள்ளி வரை சென்றனர்.

    மேலும் பேரணியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. தொடர்ந்து, இவ்வாகனம் மூலம் முக்கிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகளை குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் சின்னராசு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி நிர்வாக பொறியாளர்கள் மயில்வா கனம், ராமசாமி, டேனியஸ் மற்றும் மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும்.மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார்செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக பயன்படுத்தலாம். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களை கொண்டு எளிதாக கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடியது.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் –சேகரிப்பின் முக்கியத்துவம் பொருள் குறித்தும், இது சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மேற்காணும் பொருள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எல்இடி., ஊர்தி மூலம் விழிப்புணர்வு ஓட்டம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் மழைநீரின் முக்கியத்துவத்தை அறிந்து மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    தற்போது மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. தொடர்ந்து சமூகநலத்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியில் தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியார்கள் மாதேஸ்வரன், கண்ணன், உதவி செயற்பொறியார்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும் சசிக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    • வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.
    • மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும்.

    இறங்கி வரும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும், பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும், கால்நடைகள் நீர் பருகுவதற்கு வாய்ப்பாக அமைவதும், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் வருமானத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும். பருவ மழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை தனது சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான்.

    இறுதிப்பாசனத்திற்கும், அதன் இடையே தேவைப்படும் உயிர் பாசனத்திற்கும், வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழிவையே கொண்டது. தமிழகத்துக்கு 32 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடைகாலத்திலும் மழை பொழிவு கிடைக்கிறது.

    இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும். பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்கலாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம், வயல்களில் மொத்த வடிகால்களையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்புக்கு 8-க்கு 5 மீட்டர் அல்லது 10-க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். மானாவாரியில் 40-க்கு 40 மீட்டர் நீள அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. ஆழம் 2 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழிவெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும்பகுதியை வயலில் வரப்பினை பலப்படுத்தவும், குழிப்பகுதியை சுற்றி அணைக்கவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளளவு 40 கனமீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது மனித சக்தி மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், பருத்தி, பயறு வகை, சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெற முடியும். பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம். அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும். குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணைக் குட்டைகளில் நீர் தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இது போல், மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும் போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுற்றுப்புறத்தில் குளிர்ந்த காற்று வீசும்.

    உபரிநீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன் வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், பண்ணைக்காடுகள் வளர்க்கவும், நாற்றுகள் பராமரிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் இந்த நீரை பயன்படுத்தலாம்.

    • ஊராட்சிகளில் மார்ச் 22-ந் தேதி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன.
    • உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பூர் :

    தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மார்ச் 22-ந்தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடி க்கப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் மார்ச் 22-ந்தேதி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன. இந்நாளில் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாயமான மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மழை நீரை சேமிப்போம்,நிலத்தடி நீரை பாதுகாப்போம் என காலம் காலமாக கூறப்பட்டு தான் வருகிறது. ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த ப்படுவதில்லை. குடியிருப்புகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இக்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலேயே கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஜல் சக்தி திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.இதன்படி அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் ,பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் கட்டமைப்பு நிறுவ உத்தரவிடப்பட்டது. இக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    இதன் பிறகு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கட்டமைப்புகள் அனைத்தும் மாயமாகிவிட்டன. இன்றைய சூழலில் போதிய பருவ மழை கிடைக்காவிட்டாலும், நிலத்தடி நீர்தான் மக்களுக்கு ஆதாரமாக உள்ளன.

    உரிய காலத்தில் கிடைக்கும் மழை நீரை சேமிக்காவிட்டால் வறட்சி காலங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீர் சேமிப்பானது வெறும் விழிப்புணர்வுடன் நின்று விடாமல் இதை சட்டமாக இயற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடப்பதால் தண்ணீர் அவசியத்தை உணர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டாயமா க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.
    • காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும்.

    உடுமலை :

    கோடை கால உழவு முறை மற்றும் எந்திரங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:-

    கோடையில் பெய்யும் மழை நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொக்கி கலப்பை கொண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டும் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

    கோடை உழவு காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும். முந்தைய பயிரின் தூர்கள், களைகளை உரமாக மாற்றும். தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    உழவின் போது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகை செய்கிறது.

    இறகு வார்ப்பு கலப்பையானது தரையில் இருந்து மண்ணை தோண்டி குறைந்தபட்சம் இரண்டு அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பையில் இருந்து இரண்டடி தள்ளி மண் பிரண்டு விழும். இப்படி செய்யும் பொழுது மண் இலகு தன்மையும், அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும். உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

    சட்டிக்கலப்பையானது ஒன்றை அடி ஆழமுள்ள மண்ணை வெட்டி மண்ணை கட்டியாக போடும். ஆரம்ப காலங்களில் இந்த வகை கலப்பைத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் இறகு வார்ப்பு கலப்பை வந்தது.சட்டிக்கலப்பையை பயன்படுத்தினால் மண் கட்டி கட்டியாக விழும். அதை உடைப்பதற்கு ஒன்பது கொத்து கலப்பை கொண்டு மறுபடியும் உழவு செய்ய வேண்டியிருக்கும்.

    சுழல் கலப்பை, கட்டி உடைப்பான், மண்ணை பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணை பிளப்பதற்கு கத்தி போன்ற முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ., ஆழம் வரை உழக்கூடியது. இது இலகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கை கழுவுதல் நுட்பங்கள், கை கழுவவதின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கை கழுவுதல் நுட்பங்கள், கை கழுவவதின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் டயானா, களப்பணியாளர் அருள் சகாய செல்வி ஆகியோர் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 14 கிராமங்களில் 64 குக்கிராமங்களில் பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கியிலும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பிரசாரம் செய்தனர். அரசு மருத்துவமனை டாக்டர் அருண்குமார் மற்றும் ஊழியர்கள் வாகன பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

    கடலூர்:

    வேப்பூர் அருகிலுள்ள நகர், நல்லூர், ஐவதகுடி, ஏ, சித்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார். நகர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, சத்துணவு சமையல் கூடம், நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடம் உள்ளிட்ட ஆறு இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்ட யஸ்வந்த்சாய் அதில் தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

    அப்போது நல்லூர் பி.டி.ஒ., சங்கர், ஜெயக்குமாரி, என்ஜினியர்கள் ராஜேந்தி ரன், சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், துணை தலைவர் ராம சாமி, ஊராட்சி செய லாளர் தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்த னர். நல்லூர் ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அமைந்துள்ள வட்டார சேவை மையம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்தார் அப்போது பிடிஒ,இன்ஜினியர்கள் ஆகியோருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயக்குமார், , நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன், ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து தற்போது கடும் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அலுவலக வளாகத்தில் செயல்பாட்டில் இருந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும் தற்போது பராமரிக்கப்படுவதில்லை.

    திருப்பூர்,

    தமிழகம் முழுவதும் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மழை நீர் சேகரிப்பு முறை அனைத்து அரசு , தனியார் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே அனுமதி என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக அதற்கடுத்த ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.

    தற்சமயம் அரசு,தனியார் உள்ளிட்ட கட்டிடங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்படாமலும் , ஏற்கனவே ஏற்படுத்தப் பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமலும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை நீரை சேகரிக்கும் அமைப்புகள் புதிதாக நிறுவப்படாததாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து தற்போது கடும் சரிவை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் நகரில் அமைந்துள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உருவாக்கிய மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் மாதிரியை கொண்டு , கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து வீடுகள் , வர்த்தக நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்கினார் என்பதை நினைவு கூறுகின்றனர் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் .

    கடந்த 2000மாவது ஆண்டில் இப்பள்ளியில் பயின்ற 7 -ம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் தடுப்பணை ஒன்றை கட்டி அதில் பள்ளிக்கட்டிடங்களில் மழை காலத்தில் விழும் நீரினை தேக்கி , அருகில் உள்ள பள்ளிக்கிணற்றில் நீர் மட்டத்தை உயர்த்தினர் . இத்திட்டம் குறித்து அறிந்த அப்போதைய நகராட்சி நிர்வாக செயலாளர், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் . உடனடியாக அந்த மாணவிகளையும் வழிகாட்டி ஆசிரியராக இருந்த ஈஸ்வரனையும் அழைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ,எம்ஜிஆர். அறக்கட்டளை சார்பாக 5000 ரூபாய் கொடுத்து பாராட்டினார்.மேலும் இந்த திட்டம் தேசிய அளவில் விருதுகளையும் பெற்றது .

    இதனைதொடர்ந்து, மாணவிகளின் திட்டத்தின் பயனை உணர்ந்து, தமிழக அரசு 2001 -ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்கனவே உள்ள அனைத்து குடியிருப்புகள் , தொழிற்சாலைகள் , அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பை காட்டாயமாக்கியதுடன் , புதிதாக கட்டப்படும் அனைத்து காட்டுமானங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டும் கட்டிட அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது .

    இதன் பின்னர் 2002 ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற,3 ஆம் குடிநீர் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாணவிகளின் இத்திட்டம் குறித்து பெருமையாக நினைவு கூர்ந்தார்.இது குறித்து முன்னாள் மாணவிகள் கூறும்போது, பள்ளி அளவில் செய்த மழைநீர் சேகரிப்பு முயற்சிக்கு தமிழகம் முழுவதும் முதல்வர் செயல்படுத்தி மிகப்பெரிய அங்கீகாரத்தை அன்றைய முதல்வர் எங்கள் பள்ளிக்கு கொடுத்தார். இத்திட்டம் பல்வேறு விருதுகளை பெற்றதுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்கள் குழுவுக்கு கொடுத்த பரிசுத் தொகையும் , பாராட்டும் இன்றும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளதாக குறிப்பிட்டனர் .

    அரசு பள்ளி மாணவிகளின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தமிழகம் முழுவதும் அவரது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பயனுள்ள திட்டங்களில் ஒன்றாக மாற்றியது தங்களின் பள்ளிக்கு பெருமை என்றே அப்பள்ளியில் பயின்ற மாணவிகள் நினைவு கூர்ந்தனர் . அதே நேரத்தில் தற்போது போதிய அளவில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமையும் , புதிய கட்டுமானங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு செயல்படுத்தப்படுகிறதா குறித்து கண்காணிப்பும் இல்லை என்றே கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    ஏற்கனவே அரசு அலுவலக வளாகத்தில் செயல்பாட்டில் இருந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும் தற்போது பராமரிக்கப்படுவதில்லை என்பதையே காணமுடிகிறது .அவை உடைந்தும் தண்ணீர் தேங்கா வண்ணமும் உள்ளது. திருப்பூர் போன்ற மழை குறைவான வறட்சி மாவட்டங்களில் மழையின் தேவையை உணர்ந்தாவது இனி வரும் காலங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி , வான் கொடையான மழைநீரை சேமிப்பதே நம் வருங்காலத்துக்கு பயனாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

    ×