search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணை குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
    X

    பண்ணை குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

    பண்ணை குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

    • நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்
    • 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடக்கிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் இ.சுதா இளங்கோ அவர்களிடம் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் பணிகளை நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×